பக்கம் எண் :

28

வளவையும், தன்னிடத்து விளைந்த பொன்னையே கொடுத்து, அரசனும்
வியக்கப் புகழடைந்தது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- கீழ்கரைப் பூந்துறை நாட்டின் இணைநாடு
பருத்திப் பள்ளிநாடு ஆம். அந்நாட்டில் உள்ள கஞ்சுமலையில் ஒரு
சிறு வாரி உற்பத்தியாகி வருகிறது. அத மகடஞ்சாவடி ரைல்வே
ஸ்டேஷன் ஓரமாகத் தெற்கு நோக்கிச் செல்கின்றது. அதனைப்
பொன்னி ஆறு என்பர். அதிலுள்ள மணலைக் கரைத்துப் பொன்
சன்னமெடுக்கிறார்கள். உழைப்புக்குத் தக்க கூலி போல் கிடைக்கிறதாம்.
எட்டரை மாற்றுண்டு. இது போற் கொங்கு மண்டலத்தும் பொற்கனி உள்ள
இடங்களிருக்கின்றனவாதலால், ஆதித்தன் என்னுமரசன் கனக சபையாக்கப்
பிரயத்தனப்பட்ட சமயத்தில் கொங்கு நாட்டில் விளைந்த தங்கத்தாலேயே
பொன் ஓடு பாவினன்.

                        (மேற்)

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
திங்கட் சடையர் தமரதென் செல்வமெ னப்பறைபோக்
கெட்கட் கிறைவ னிருக்கும் வேளூர்மன் னிடங்கழியே

                         (நம்பியாண்டார்நம்பி திருவந்தாதி)

 * கோனாட்டுத் கொடும்பாளூ ரிருக்கு வெளிர் குலத்தலை வரிடங்
   கழியார் கொங்கிற் செம்பொன், ஆனேற்றார் மன்றின் முக டம்பொன்
   மேய்ந்த வாதித்தன் மரபோர் நெற்கவர்ந் தோரன்பர், போனாப்ப
   ணிருளின்கட் காவலாளர் புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு,
   மனோற்றாரடியாரே    கொள்க வென்று வழங்கியர சாண்டருளின்
   மன்னினாரே.

                         கம்பர்

30.



கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச் செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே.


 * கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற் கரைக்குக்
   கிழக்கு, காவிரி நதிக்குத் தெற்கு, பிரான் மலைக்கு வடக்கு இந்நான்
   கெல்லைக்குட்பட்டது மதிற்கரை தான் (கொங்குத்) தட்டய நாட்டின்
   கிழக்கு. எனவே சோழமண்டலத்துக் கோனாடும், கொங்கு மண்டலத்துத்
   தட்டய நாடும் எல்லைச் சந்திப்பு நாடுகளாக உள்ளன.