பக்கம் எண் :

29

     (க-ரை) "கன்னியழிந்தனள்" என்றத் தொடக்கத்துப் பாட்டைக் கம்பர்
பாடும்படி செய்த, கங்கா குலத்தவர்கள் வசிப்பது கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு :- குலோத்துங்க சோழன் காலத்தில் காவேரி நதி பெருகி
வெள்ளங் கரைகடந்தது. இதனால் அந் நதியின் இருபாலும் உள்ள நிலம்
ஊர் முதலியன வெல்லாம் கெட்டன. அரசனும் அதிகாரிகளும் குடிகளும்
கூடினார்கள். கரை கட்டினார்கள். நிற்கவில்லை. குடிகளாகிய வேளாளர்கள்
அரசனை நோக்கி ஐயா, தெய்விகப்புலமை வாய்ந்த கம்பர் பாடினாற் கரை
நிற்கும் என்றார்கள். அரசனும் குடிகளும் அங்கு இருக்கும் மஹா கவியாகிய
கம்பரைப் பல முறையும் வேண்டினார்கள். "கன்னியழிந்தனள்" என்னுந்
தலைப்பையுடைய ஒரு வெண்பாக் கூறினர். நதிப்பெருக்கு அடங்கியது,
பெருமகிழ்வுற்ற அரசனுங் குடிகளும். கொங்கு மண்டலமும் சோழமண்டலமும்
அழியாது ஆற்றுப் பெருக்கை அடங்கச் செய்த பேருபகாரத்துக்கு யாது
கைம்மாறு செய்யவல்லோம்; ஆயினும் ஏது விரும்பினும் உதவத் தயாராக
இருக்கின்றோம் என்றார்கள். கம்பர் புன்னகை யரும்பி அரசே!
எப்பொழுதும் அரசனும் குடிகளும் நினைக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.
ஆதலின் குடிகளும் கலியாண வரி ஒன்று ராஜாங்கத்துக்குச் செலுத்தி
வருகிறார்கள் அதை இதற்கு உதவுவதே போதும், என்றனர். உடனே
சோழன் ஒரு சாசனம் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தனன்.

     இந்த நிகழ்ச்சியானது என்வல்லமையாலன்று, தெய்வத் தமிழால்
நடந்தது ஆதலின் இக்கலியாண வரியை அத்தமிழுக்கே
உரிமையாக்குகின்றேன் என்ற கம்பர், அரசனையும் குடிகளையும் பார்த்துக்
கூறினதாவது:- அரசே, குடிகளே! இத்தமிழ் நாட்டுப் பழங்குடிகளான புலவர்
கூட்டத்தார்கள் இக்கொங்கு நாட்டில் வாழையடி வாழையாக வளர்ந்து
வருகிறார்கள். அரசர்களாலும் குடிகளாலும் ஆதரிக்கப்பட்டுத் தமிழை
வளர்த்து வந்தார்கள். இப்பொழுது அவர்களின் செழிப்பு மலினப்பட்டு
வருவதாகத் தோன்றுகிறது. ஆகையால் இக்கொங்கு நாட்டார் கலியாண
காலத்தில் மணமகன் மணமகளை வாழ்த்துதல் (ஆசிர்வாதம்) அவர்களாற்
சொல்லக்கேட்டு எனக்குக் கொடுத்த கலியாண வரியை அவர்களுக்குக்
கொடுத்துப் புகழையும் பெருக்கத்தையும் அடையுமாறு விரும்புகிறேன்
என்றனர். அரசனும் குடிகளும் இப் பேருதவிக் குணத்தை வியந்து பாராட்டி
அப்படியே ஆகுக ஆகுக என்றார்கள். கம்பர் வழிபாடி அப்புலவர்களிடம்
கொடுத்துத் தலைமுறை தலைமுறையாகக் காலங்களில் வாழிகூறி வரிப்
பணத்தைப் பெற்றுத் தமிழை வளர்த்து வாருங்களென்றனுப்பினர்.