பக்கம் எண் :

30

                  (மேற்)

கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரையழிந்து போயினளென் - றின்னீர்
உரை கிடக்க லாமோ வுலகுடைய தாயே
கரை கடக்க லாகாது காண் -
     
                     (கம்பர்கவி)
கதுவி வருபொன்னி கரை கடவா வண்ணம்
பதுமமுகக் கம்பனவர் பாட - வதுவைவரி
மாடை யரைக்கழஞ்சு வண்கம்பர்க் கீந்தபரி
சேடர் * குலோத்துங்க னெழுத்து.

     இக்கொங்கு நாட்டில் சோழர்கள் ஆக்கமிருந்ததற்குக் கரூர்
சோழ்களது முடிசூட்டு தலங்களைந்தினு ளொன்றாகவுமிருந்தது
மாத்திரமின்று ஜயங்கொண்ட சோழேச்சுரம், கரிகாலச் சோழேச்சுரம்,
பராக்கிரம சோழேச்சுரம், விக்கிரம சோழேச்சுரம், குலோத்துங்க
சோழேச்சுரம், குலோத்துங்க விண்ணகர முதலிய திருநாமமுற்ற சிவ
விஷ்ணு ஆலயங்களுமிருக்கின்றன. பல சிலாசாசனங் காவேரி கரை
கடந்ததென்றும். கம்பர் பாடக் கரையுளடங்கிற்றென்றும் கூறுகின்ற
பிரபந்தங்களும் சாசனங்களும் பல. விரி வஞ்சி விடுத்தனம்.
குலோத்துங்கன் இரண்டாங் குலோத்துங்கன் என்பது சரித்திர
ஆராய்ச்சியாளர் துணிபு.

               கொங்குப் புலவர் சபை

31.வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயு முரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) குலோத்துங்க சோழன் சாசனப்படிக்குண்டான,
கலியாண வரியை, ஐந்து பிரிவினையுடைய புலவர் வகுப்பினரில் தகுதி
வாய்ந்தவர்கள் இவர்களென்று பொறுக்கி எடுத்து உரிமை தரும், கொங்குப்
புலவர் சங்கங்கூடுந் திருச்செங்கோடு கொங்கு மண்டலம் என்பதாம்.


 *  ஏடா - ஓடு = ஏலை எனவே சாசனம் குலோத்துங்கன் எழுதிய
    சாசனக் கருத்தை இப்பழைய பாட்டு குறிப்பிடுகிறது.