பக்கம் எண் :

32

பலரென்றும், மதுரைக் காஞ்சியில், பாணர் வருக, பாட்டியர் வருக,
யாணர்ப்புலவரெடு வைரியர் வருக என்பவற்றின் உரையில் கவியாகிய
புதுவருவாயினையுடைய புலவரோடே பாணர் வருவாராக பாணிச்சியர்
வருவாராக, கூத்தர் வருவாராக எனவும். மலைபடுகடாம் உரையில் கூத்தர்
ஆடன் மாக்கள் எனவும், கூறப்பட்டுள்ளது. இப்பாண்குடி மக்களுக்கு விறல்
பெற ஆடுதல் விறலியர் எனவுங் கூறுவர் எனக்காணப்படுகின்றன.

     இச்சதகச் செய்யுள் இரண்டாமடியில் "பழந்தமிழைவாணர்" கொள்ள
எனக் குறிப்பிட்டள்ளது. இதனை;

புரவலன் பரிசு கொண்டு மீண்ட
விரவலன் வெயிறெறு மிருங்கா னத்திடை
வறுமையுடன் வரூஉம் புலவர் பாணர்
பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப்
புரவல னாடூர் பெயர் கொடை பாரசு
யாங்குநீ செல்கென விடுப்பதாற்றுப்படை

என்னும் இலக்கணச் சூத்திரம் வலியுறுத்துகின்றது.

     இந்நாளிற் கொங்கு மண்டலத்தார் கொள்ளும் ஐவாணர்களாவது:
பட்டன் - புலவன் - பண்பாடி - தக்கைகொட்டி - கூத்தாடி என்பவர்கள்.
இதனைக் கொங்கு வேளாளர் கலியாணத்திற்பாடும் மங்கல வாழ்த்து* என்று
நாளும் பாராட்டும் நூலில்!

பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்
திட்டமாய்ச் சோபனஞ் செப்பி முன் னேவர
அரம்பை மேனகை அணிகொள் திலோத்தமை
திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்,
வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று
நன்மை சேர்பரத நாட்டிய மாடிய - எனவருவது காண்க.

     பட்டன் - தலைவனது புகழை எதிர்நின்று பாராட்டுவோன்.
     புலவன் - இயற்றமிழால் இருந்து புகழ்வோன்.
     பண்பாடி - இசைத் தமிழ் பாடுவோன்
     தக்கைகொட்டி - தக்கையென்னும் ஒருவகை வாத்தியம் வாசிப்போன்.
     கூத்தாடி - நாடகத் தமிழ் நடத்துவோன் எனவே இவர்களின்
     உயர்வு தாழ்வு வகையாகப் பல உட்பிரிவின ருளராகத்
தோற்றுகிறார்கள்.


  * மங்கல வாழ்த்துங் கம்பர் இயற்றியதாக வழங்குகிறது.