(க-ரை)
ஒரு விதையை வைத்துச் சிறு கல்லால் தட்டிய இடைச்
சிறுவன், மெய்ஞ்ஞானத்தைப் பெறுமாறு அடிக்கல்லாக நின்ற தமது
திருமுடியினின்றும் இரத்தம் வடியக்காட்டி, அருள் புரிந்த அப்பிரமேயர்
வீற்றிருக்கும் தென்கரை நாடும் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
: ஆம்பிரா நதி தீரமான தென்கரை நாட்டுக்
கொற்றவனூரில் வசிக்கும் இடையர் தலைவனது சிறுவன் ஆனிரை
மேய்க்கச் சென்றான். இந்த ஊதியூர் மலைமேற் கொடிய
விலங்கினங்களிருப்பதால் அங்குச் செல்ல வேண்டாமென்று தாதை
எச்சரித்தனன். மாலை நேரத்தில் ஆடுகள் சென்ற வழியே சிறுவன்
தொடர்ந்தான். இருள் வந்துவிட்டது. காட்டில் வருந்தித் தங்கினன்.
உதயமாயிற்று. பதிந்து காணும் ஒரு கல்லின் மேல் ஒரு விதையை
வைத்து மற்றொரு சிறு கல்லெடுத்துத் தட்டினன். அடிக்கல்லினின்று
இரத்தம் பெருகிற்று. அடிக்கல்லாக நின்ற சிவலிங்கத்தைப்
பிடித்துக்கொண்டு தியங்கிக் கண்ணிருண்டு செயலற்றிருந்தனன். முதல்நாட்
சென்ற பிள்ளை வராமையால் வருந்திய தாதை தேடிவந்து பிள்ளையின்
நிலையறிந்து வருந்தினான். நம்மை வழிவழி ஆட்கொள்ளும் ஆண்டவன்
செயலென்று நினைந்து வெயில் முதலியன படாது பந்தல் முதலிய இட்டுக்
கோயிலாக்கிப் பால் தயிர் முதலியன குடங்குடமாகக் கொண்டு வார்த்துப்
பூக்கொய்து திருமுடியிற் சாத்தித் தளிகை செய்து படைத்துத் தந்தையும்
பிள்ளையும் வணங்கிவந்தார்கள். தந்தை, சிவபதமுற்றனர். சிறுவன் விபூதி
ருத்திராக்கந் தரிசித்துப் பாஞ்சாக்கரமோதிப் பணிவிடை செய்து வந்தனன்.
சிவபெருமான் கிருபைகூர்ந்து சிவஞானத்தைப் புகட்டி முடிவில் சிவகண
நாதனாக்கினர். அந்நாள் முதல் இந்நாள்காறும் அக்கோயிலில்
அச்சந்ததியார் நவராத்திரி காலத்தில் அம்புபோடுதல் முதலிய
மரியாதையையடைந்து வருகிறார்கள் கொற்றவனூர் சிவாலயத்தில் இந்த
இடைஞானியார் விக்கிரகம் பூசிக்கப்பட்டு வருகிறது.
(மேற்)
முண்டக
னெகினப் படிவிற் றேடுற முடியாத் திருவுயர்
முடிமீதே
புண்டகு சோரி பொழிந்துற வோர்கல் புடைத்த விடைச்சிறு
புதல்வோனைக்
கண்டிடை ஞானியெ னச்செய்து நாள்பல கால்பூ சனைகொடு
கவின்மேவுந்
தண்டிக ணேசர் பதத்தினி லுய்த்தமை தரைகூர் தமிழினி
லுரைகூர்வாம்
(அப்பிரமேய
தலபுராணம்)
|
|