ஆலவட் டப்பிறை
யைவே லசதி யணிவரைமே
னீலவட் டக்கண்க ணேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து
வேலைவிட் டுக்குத்தி வேட்டுவ ளாகில் விலக்கரிதே.
ஆய்ப்பாடி
யாயர்த மைவே லசதி யணிவரையிற்
கோப்பா வவளெழிற் கொங்கைக்குத்தோற்றிபக் கோடிரண்டுஞ்
சீப்பாய்ச் சிணுக்கரியாய்ச் சிமிழாய்ச் சின்ன மோதிரமாய்
காப்பாய்ச் சதுரங்கமாய்ப் பல்லக்காகிக் கடைபட்டதே.
ஆதித்
தனைக்கண் டரவந் தொடவந் நகரினுள்ளார்
பாலித்த முத்தும் பவளந்தொட் டாரிந்தப் பைந்தொடியாள்
சேனைத் தலைவனைச் செங்கோ லசதியைச் சேர்ந்தொரு நாள்
கூடித் தழுவுவ மென்றுதொட் டாடன் குவிமுலையே.
(அசதிக்
கோவை)
|
சேனைத்
தலைவனைச் செங்கோ லசதியை என்னுங் குறிப்பு
உண்மையால் இவன் படைத்தலைமை அதிகார வருக்கத் தவனெனக்
கருதப்படுகிறான்.
இந்த
ஐவேலி என்பது சங்ககிரி மிட்டாவைச் சார்ந்த பாகமாக
இருக்கிறது. அரசுரிமைப் பதிவிலும் ஐவேலிக் கிராமம்என்று பெயர் இருந்து
வருகிறது. ஆனால் ஊர் நத்தமாகப்போய் விட்டது. என்றாலும் அவ்விடத்தை
அடுத்த இடையர் வீடுகள் மாத்திரம் 200 உள்ள இடையர்பட்டி என ஓர்ஊர்
இருக்கிறது.
சீயகங்கன்
46.
|
சொல்காப்
பியத்தின் குண்தோடந் தேர்ந்து சொலுவதற்குத்
தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை
யொல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த
வல்கா வலன்சீய கங்கனுந் தான்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
தமிழ்க் காப்பியங்களின் ஒப்பு தப்புகளைத் தெரிந்து
கொள்வதற்குத் தொல்காப்பியம் என்னும் இலக்கணம் விரிந்து கிடக்கின்றன.
அதனைத் தொகை வகை விரியால் சுருக்கி விளக்கி உலக உபகாரமாக
ஒருநூல் செய்தருளுக என்று பவணந்தி முனிவரைக் கேட்டுக் கொண்ட
சீயகங்கன் என்னும் அரசனுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
|