அப்புலவர்கள் பொருள்களையும்
நூல்களையும் கொள்ளை கொண்டு
வருவன். அவன் திருச்செங்கோட்டு எல்லையில் வந்து தன்முன் பாம்பு
வடிவமாகத் தோன்றும் நாகாசலத்தை நோக்கிப் பல்லக்கிலிருந்தபடியே,
(மேற்)
சமர
முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென
வமரிற் படம்விரித் தாடாத தென்னை? |
என
இரண்டாமடியினை முடிக்க இயலாது சிறிது நேரம் மயங்கினான்.
இதன் முன்னே அந்நகரத்துக் குணசீலன் என்னும் வித்துவான் இந்தப்
பிரதிவாதிபயங்கரன் விடுத்த ஓலையைக்கண்டு பயந்து செங்கோட்டு வேலர்
திருவடியைத் துதித்து நித்திரை கொண்டான். கனவில் ஒரு வித்துவானாகக்
குமரக்கடவுள் தோன்றி அன்பனே அஞ்சாதே பிரதிவாதி பயங்கரனைப்
பயமுறுத்தி ஓட்டி விடுகிறேன் என்று கூறி மறைந்தனர். அவ் வண்ணமே
மாடுமேய்ப்பவனாகப் பாண்டி நாட்டுக் கவிராயன் முன்னின்று,
-
அஃதாய்ந்திலையோ
நமரின் குறவள்ளி
பங்க னெழுகரை நாட்டுயர்ந்த
குமரன் திருமரு கன்மயில் வாகனங் கொத்து மென்றே |
எனப்பாடி முடித்தன்ன.
இதனைக்கேட்ட பிரதிவாதி பயங்கரன்
ஒன்றுந் தோற்றாது திகைப்புற்று பல்லக்கின்று கீழே இறங்கி நாம்
மனத்தினினைத்த கலித்துறையை நிமிஷத்தில் முடிவு செய்தனனே இவன்
தெய்விகக் கவிஞனாக இருக்கிறான், தொழிலோ மாடு மேய்க்குந்
தொழிலாக இருக்கிறது. இவன் முகத்தில் சரசுவதி நடனம் புரிகிறாள் எனச்
சிந்தித்து அப்பா! உன் வரலாறு என்ன? புகல வேண்டுமென்றனன். கவிஞரே
இத்திருச்செங்கோட்டில் குணசீலன் என்னும் வித்துவானின் கடை
மாணாக்கன் - கண்ட சுத்தி பாடுவதில் தாமதமுடையவன் என்றனன். நன்கு
கற்ற வித்வானாக இருந்து மேய்க்குந்தொழிலை நீர்வகுத்த காரணமென்னை
எனவே, புலவரே, எல்லா வுலகத்து முள்ள உயிர்வகைகளில் பசுக்களைப்
போன்ற உபகார ஜன்மமுள்ளவை ஒன்றுமில்லை. எல்லாத் தேவர்களும்,
எல்லாப் புண்ணிய நதிகளும் பசுவுருப்பில் பொருந்தியுள்ளன. அதன்
மலமும் ஜலமும் பரிசுத்தமாக்கத்தக்கது என்பதை அறிந்திருக்கிலீர் போலும்
எனப் புகன்றனர். இதனைக்கேட்ட பிரதிவாதி பயங்கரன் மனம் நடுங்கி
இவனே இவ்வளவு ஆகம சாஸ்திர ஆராய்ச்சியும் நினைவு அறியும்
ஆற்றலுமுடையவனாயின் இவனது ஆசிரியர் எத்தன்மையாக இருப்பர்
என்று பல்லக்கைத் திருப்பிக்கொண்டு போய்விட்டான்.
இக்கதையின்
விரிவு திருச்செங்கோட்டு மான்மியத்திலறியலாம்.
|