பக்கம் எண் :

60

                   ஆணூர்ச்சர்க்கரை

51.



திருத்து புகழ்பெறு மாணூரிற் சர்க்கரை செந்தமிழோன்
விருத்தமுட னன்னை மேலேறத் தாய்வெகு ளாமலெனைப்
பொருத்த முடன் பத்து மாதஞ் சுமந்து பொறை யுயிர்த்தாய்
வருத்த மிதிலென்ன வென்றா னவன்கொங்கு மண்டலமே.

     (க-ரை) பெருகிய புகழ்பெற்ற ஆணூர்ச் சர்க்கரை என்பான் தாயார்
அன்னம் பரிமாற உணவருந்தும் புலவோர்களில் ஒருவன். அவ்வன்னை
முதுகின் மீதேறினான். இக்கொடிய செய்கைக் காற்றாததாய் தன்பிள்ளை
முகநோக்க, பிள்ளை, அம்மா! என்னை பத்துமாதஞ் சுமந்திருந்த தாங்கள்
இப்புலவரைச் சிறிது நேரஞ் சுமக்கலாகாதா? எனக் கூறிய
சர்க்கரையென்பானும் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கல்வி, அறிவு, சீலம், சான்றாண்மை, அன்பு, தவம்,
மெய்ப்பக்தி, ஜீவகாருண்யம், பரோபகாரம், ஈகை முதலிய உத்தம
குணங்களில் தலைசிறந்து புலவோர் புகழ்ந்து பாடும், புகழ்ச்சிக்குக்
குரியராய்த் தொண்டை நாட்டுச் செங்குன்றையூரில், எல்லப்பன், என்னும்
பெயர் வாய்ந்த உபகாரி ஒருவர் வாழ்ந்து வந்தனர். இச் செல்வரின்
சிறந்த கொடை மடமும், தமிழபிமானமும் எங்கும் பிரசித்தி பெற்றிருந்தன.
இவர் பெருமையைப் புகழ்ந்து பாடாத புலவர்கள் இல்லையென்றே
சொல்லல்வேண்டும். இவ்வுண்மையை அடியில் வரும் பாடல்களாலறியலாம்

                    (மேற்)

புறவோ டுடற்றசை போக்கிய வேந்தன் புரிந்ததினு
மறவோ கொடிது கொடிதுகண் டீரற னன்றுமற்றுப்
பிறவோ மறுத்துரை செய்யான் மிகச்சிரம் பேர்த்துவைத்த
மறவோனைத் தாங்கிய வையமன் றோதொண்டை மண்டலமே.

தலையிந் தாவெனு மைந்தா தாலோ தாலேலோ
தண் குன்றைப்பதியெல்லா தாலோ தாலேலோ

ஆலெங்கே யங்கே யரும்பறவை யாற்றுயிலு
மாலெங்கே யங்கே மலர்மடந்தை - சோலைதொறுஞ்
செங்கே தகைமணக்குஞ் செங்குன்றை யெல்லனெங்கே
யங்கே யிரவலரெல் லாம்.