பக்கம் எண் :

61

     இங்ஙனம் புலவர் புகழ்ந்து பாராட்டும் கொடைத்திறஞ் சிறந்த
வள்ளல் பெருந்தகையாரிடத்துக் கொங்கு நாட்டில் நொய்யல் நதி
வளப்பத்தாற் சிறந்த காங்கேய நாட்டு ஆணூரில் பெருஞ் செல்வமும்
அருங் கொடையும் பொருந்திக் கொங்கு நாட்டு வள்ளல் என்னும் சிறப்புப்
பெயருக்கு உரியராய்ப் புகழ்மலிந்த சர்க்கரையார் சமஸ்தானத்துப் புலவர்
ஒருவர், சன்மானம் பெறும் பொருட்டுச் சென்றனர். புலவர் அருமை
பெருமைகளையும், தமிழறிவினையும் எல்லப்பன் உணர்ந்து மிகமகிழ்ந்து
தகுந்த பரிசையளித்தனர். புலவர் தியாகம் பெறுமுறைக்கு மாறாக
இடதுகையை நீட்டினர். எல்லப்பன் புலவரை நோக்கிச் சன்மானம்பெறும்
முறைமையை இன்னமும் நீர் அறிந்திலீர் போலும் என புலவர், சீமானே!
நன்றாக அறிந்துள்ளேன்; ஆனால், அமர்ந்த பொறையும், தமிழறிவும்,
ஈகைக் குணமும், ஒருங்கே நிறைந்து அன்பு சிறந்த சர்க்கரையின்
சமுகத்தில் தியாகம் பெற்ற வலக்கை, பிற எவரிடத்தும் நீட்டுவதில்லை
யென்று கொண்டிருக்கும் கொள்கையே சமுகத்தில் இடது கை நீட்டியதற்குக்
காரணம்; ஆதலின் சினங் கொள்ளலாகாதென்றனர். இது கேட்ட எல்லப்பன
வியந்து அங்ஙனமாயின் மெத்தச் சந்தோஷம். அவ்வள்ளலின் உதாரகுணம்
பெருகிய அன்பின் திறம் பொறையின் உண்மை நிலை முதலியவைகளை
அறிந்து வருமளவும் தாம் நமது விருந்தினராக இருந்துவருக
என்றாஞ்ஞாபித்துத் தமது சமஸ்தானத்துப் புலவர்களில் சில வல்லவர்களைத்
தேர்ந்து சர்க்கரையாரின் குணஞ் செயல்களை அறிந்து வருமாறு
அனுப்பினர். அவர்களும் அவ்வாறே அறிந்து வருவதாகக் கூறிக் கொங்கு
நாடடைந்து, சர்க்கரையாரின் அழகிய பூந்தோட்டத்திற் புகுந்து அருமையாக
வளர்க்கப் பெற்றிருந்த உயர்ந்த, செடி கொடிகளையெல்லாம் தாறுமாறாக
வெட்டினார்கள். இது கண்ட காவலாளர், புலவர்களின் செய்கைக்காற்றாது
தமது தலைவரிடத்துச் சென்று அறிவித்தனர். கேள்வியுற்ற மன்றாடிமார்
காவலாளிகளை நோக்கி அவர்கள் புலவர்களாயின், அவர்களுக்கு
இன்சொல்கூறி, இன்னல் செய்யாது, என்னிடத்து விரைவில் அழைத்து
வாருங்கள் என்று உத்தரவிட்டனர். கட்டளைப்படியே காவலாளரும்
புலவர்களை அன்பாக அழைத்து வந்தனர். அவர்களுக்கு நல்வரவு கூறி,
இருக்கை நல்கி, இன்மொழி புகன்று, அருந்தமிழுணர்ந்த பெருந்தமிழ்ப்
புலவீர்! பூஞ்செடிகள் ஒவ்வாதன வாயின் ஏவலாளரை விட்டு
வெட்டுவிக்கலாமே, கற்களிழைத்த கணையாழிகளையும்,
கனகதோடாக்களையும் பூண்டு புராணேதிகாசங்களைத்தொடும்
தொழிலையுடைய திருக்கரங்கள், கடினகோடரி, அரிவாள் முதலிய
ஆயுதங்களைத் தொட்டு வருந்தலாமோ, கைகள் வலிக்குமே, என
முகமன் கூறி உயர்ந்த தைலங்களைக் கைகளுக்குத்