தடவி வெந்நீராட்டுவித்தனர்.
புலவர்கள் அம்மட்டில் அடங்காது,
இன்னும் நன்கு சோதிக்க நினைந்து, அருமையுறப் படைத்த விருந்தில்
வீற்று உணவருந்திக் கொண்டிருக்கையில், அன்னம் பரிமாறி உபசரித்துக்
கொண்டிருந்த சர்க்கரையாரின் * அன்னை முதுகின் மீது ஒரு புலவர்
ஏறினார். திடுக்குற்ற தாயார் தன் மைந்தன் முகநோக்கினார். என்
அம்மையே! அந்திபகல் சிரமங் கருதாது தொந்தி சரிய என்னைப்
பத்துமாசஞ் சுமந்திருந்த தாங்கள், இப் புலவரைச் சிறிது நேரம்
சுமத்தலாகாதோ! தங்கள் பொறுமை எங்கொளித்தது என்றனர். இதுகேட்ட
புலவர் சட்டெனக் கீழிறங்கிப்பொறையே உருவுகொண்ட தாதாவையும்,
அப்பிரபுவைப் பெற்றெடுத்த பெருந் தேவியையும், தங்கள் திருந்திய நாவால்
பலபடியாகப் புகழ்ந்து நன்றாக வாழ்த்தித் தங்கள் அன்பையும், பெருகிய
ஆதரவையும், அளித்தற்காகவே நாங்கள் இத்தகாச் செய்கை
செய்தோம்,
எங்கள் குற்றத்தை மன்னித்தருளல்வேண்டும். நாங்கள் தொண்டை நாட்டு
பெருந்தியாகியாகிய குன்றை எல்லப்பன் என்பார் சமஸ்தானத்துப் புலவர்கள்
என்று கூறினர். சர்க்கரை யாரும் பிறருங்கேட்டு மகிழ்ந்து "தொண்டை
நாட்டார் சோதனைகளுக்குக் கொங்கு நாட்டார் ஆற்றவல்லரோ" என்று
கனிவான இன்னுரை புகன்று அவர்களுக்குத் தக்க சன்மானமளித்து
வழியனுப்பினர். விடைபெற்ற புலவர்கள் எல்லப்பன் சமுகஞ்சேர்ந்து,
செங்குன்றை
யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்
கெங்கெங்குந் தேடி யிணைகாணேங் - கொங்கதனிற்
சர்க்கரையைப் பாடலாந் தண்டமிழ்க்கொன் றீயாத
எக்கரையாம் பாடோ மினி. |
என அழகிய ஒரு வெண்பாக்
கூறித் தாங்கள் சென்றது முதல் திரும்பிய
வரையும் நடந்த விவரங்களை யுரைத்து அருமை பாராட்டினர். அதன் பின்
தமது விருந்தினராக விருந்த கொங்கு நாட்டுப் புலவரை அழைத்து நீர்
நுமது பிரபுவைப் பற்றிப் பெருமை கூறியது முற்றிலும் பொருந்தும் என்று
கூறி, அவர் வெறுக்குந்தனையும் வேண்டிய பொருள்கள் சன்மானித்து வழி
விடுத்தனர் என்ப.
* "அன்னை
வெரிந் மேற்கொளச்சே யானனத்தை நோக்குதலும் என்னை
யீரைந்துதிங்க ளின்பாய்ச் சுமந்தீரே இவரை யொருநிமிட மேசுமப்பீர்
என்றுரைத்த" (நல்லதம்பி சர்க்கரை காதல்)
|