பக்கம் எண் :

65

                         (மேற்)

              இரகுநாத சேதுபதி சமஸ்தான தளவாய்
          அண்ணாமலை பிள்ளைமீது பொன்னாங்காணி
                 அமுதகவிராயர் கூறிய விருத்தம்

சீரிலகுமான்மணிப் பாய்சுமந் தான்கம்பர் சிவிகை
                        பாண்டிய னேந்தினான்
செல்வமுயர் கச்சியப் பன்உதை பொறுத்தனன்
                      றிகழ்சுட்டி சோமனீந்தான்
தாரிலகு குமணனுந் தலைகொடுத் தான் சிவன்
                      றானுமொரு தூதுசென்றான்
சர்க்கரையு மெச்சில்வாய் கழுவினான் காளத்திதன
                        திருகை புற்றி லிட்டான்
போரிலகு கம்பயனும் விரலாழி யீந்தனன் பெரியவன்
                           பெண் கொடுத்தான்
பிணிமுகத் தான்கீர னைப்புரந் தான்பேதை முதுகிலன
                            மொருவ னிட்டான்
பாருலகி லித்தமிழ்க் குத்தொண்டு செய்தபேர் பார்க்கிற்
                             கணக் கில்லையே
பரராசர் பணிகின்ற வண்ணா மலைக்குரிசில்
                         பாதத்தை வருடினானே.

     இவ்வமுத கவிராயர் ஒருதுறைக் கோவைபாடிய, இரகுநாத சேதுபதி
கி.பி. 1647 முதல் 1662 - வரை வாழ்ந்தவர். எனவே 300 வருஷங்களின்
முன்இச்சரிதம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

மகிழ்ந்துகா ரைப்பதியில் வாழ்சர்க் கரைதான்
புகழ்ந்து திரிபுல வோரை - இகழ்ந்து நான்
வையவில்லை யென்றுசொல்லி மண்டலமெ லாந்துதிக்க
நெய்யிலே கையைவிட்டா னேர்ந்து.
                        (செந்தமிழ்த் தொகுதி, 3-பக்-22)

தூசர்குல வாணனுக்கோர் சோர்வுரைக்க வில்லையென
நேசமுட னேகாய்ந்த நெய்யதனிற் கையை விட்டோன்
                        (நல்லதம்பி சர்க்கரை காதல்)