கடந்து கொண்டு வந்து
விட்டான். இடையே வைக்கப்பட்டிருந்த
பாண்டிவீரர்கள் சேர்ந்து கொண்டார்கள். மலைமேற் சுற்றுக்
கோட்டைகளுள்ள சங்ககிரி துர்க்கத்திற் பாண்டிய ராஜன் முன்
கொண்டு வந்து நிறுத்தினான்.
ஆறை
வாணனைக் குறித்த செய்யுட்கள் திருவண்ணாமலை
அருணாசலேசுரர் ஆலயமுதற்பிராகரத்து வடவண்டைச் சுவரில்
செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுளொன்று:
"கொங்குங்
கலிங்கமுங் கொண்டகண் டாகொடித் தேருதியர்
தங்கும் படிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல்
பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டு விழச்
செங்குன்ற மின்று பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே" |
இவனைப்
பற்றிய சாசனம் ஆறகமூர் காமநாதேசுரர் ஆலயத்து
மிருக்கிறது. கி.பி. 1178-ல் இருந்திருக்கிறான். அப்பொழுது மூன்றாங்
குலோத்துங்கன் காலம்.
சூரிய
காங்கேயனைப் பற்றிய செய்யுட்கள்
மிண்டாறை வாணனைமன்
வெட்டாமற் பாண்டியனோ
கொண்டு வந்து நிற்கவிட்ட கொற்றவனு நீயலையோ
தெண்டிரைசேர் மோரூரிற் றென்னன்மகு டாசலனே
மண்டலிகர் தேர்ந்து மெச்ச வாழ்சூரிய காங்கேயனே"
(பழம்
பாடல்)
|
பூதந்
துனைகொண்ட போர்வாணன் மாறனிரு
பாதத் துணைகாணப் பண்ணினோர் ஓதுமிசை
ராமா யணங்கேட்டோர் நவலர்வைப் புப்பொருளாங்
கோமான்வாழ் மோரூர் குடி.
(பழம்
பாட்டு)
|
மோரூர்க்காங்கேயர்
சம்பந்தமான பல பிரபந்தங்களுள் இவ்வாறு
வருகிறது.
இந்தச்
சூரியன் என்பவனுக்குக் காங்கேயன் என்ற பட்டம்
கொடுத்து எழுகரைநாடு அடங்கிய வடகொங்கு மன்னவன் என்றழைத்தான்:
அதிகாரமும் கொடுத்தான். இதற்கடையாளமாக வடகொங்குப்பட்டன் என்று
இக்குடிப் பெயர் கொண்டு வாழும் புலவரிருக்கிறார்கள்.
விரகற
நோக்கியு முருகியும் - என்ற திருப்புகழில்
"இமயவர்
நாட்டினில் நிறை முடியேற்றிய
ஏழுகரை நாட்டவர் தம்பிரானே" |
|