பக்கம் எண் :

69

     இந்நூல் 80 - வது செய்யுளின்கீழ், எபிகிராபி 1906 - வருஷாந்த
ரிபோர்ட்டு பக்கம் 35 - 36. பார்க்க.

                        ஆதிசைவர்கள்

55.குலசே கரன்குலோத் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
தலபூசை நன்குறத் தன்னாட் டுளாரிற் சமர்த்தர் கண்டு
நிலையான காணியு மேன்மையு மீய நிதானமுறு
வலவாதி சைவர்கள் வாழ்வதன் றோகொங்கு மண்டலமே.

     (க-ரை) குலசேகர சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய
சக்கிரவர்த்திகள் கொங்கு நாட்டின் ஆதிக்கம் பெற்றுள்ள காலத்தில்,
அந்நாட்டிற் சிறந்த தலங்களில் ஆலய பூஜை ஆக மோக்தமாக
நடத்தக் கருதித் தன்னாட்டுள்ள வல்லவர்களை அழைத்து காணி பூமியும்
பெருமையும் கொடுக்கப் பெற்றவர்களான ஆதிசைவர்கள் விளங்குவது
கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கோ ராஜகேசரி வன்மனான (முதல்) ராஜராஜ
தேவர் என்பவன் தஞ்சாவூரை ராஜ தானியாகக் கொண்டு மிகுந்த
பராக்கிரமத்துடனும் நீதியுடனும் ஆட்சி புரிந்தான், பராதீனப் பட்டுக்
கிடந்த சோழராச்சியத்தை உயர் நிலைக்குக் கொண்டு வந்தவனிவனே.
கங்கபாடி, நுளம்பபாடி, வேங்கிநாடு, குடகு, ஈழம் முதலிய ராச்சியங்களை
வென்றனன். மூவேந்தர் தமிழ்நாட்டுக்கும் அதிபன் என்பது தோன்ற
மும்முடிச் சோழன் என்னும் பெயருண்டாயிற்று. ஆலயங்களிலெல்லாஞ்
சிறந்ததாக இருத்தல் வேண்டுமென கருதி, கண்டோர் அதிசயக்கத்தக்க
'பிரஹதீசுரர்' என்னும் ராஜ ராஜ ராஜேச்சுர ஆலயங் கட்டுவித்தான். இவன்
சைவ சமயத்தி லீடுபட்டவனாயினும் பௌத்த விஹாரங்களுக்கும், ஜைனப்
பள்ளிகளுக்கும் விஷ்ணுக்ரஹங்களுக்கும் பல தருமங்கள் செய்திருக்கிறான்
தன் நாட்டிலுள்ள ஆலயங்களிலெல்லாம் ஆகமோக்தமாக பூஜை முதலியன
நடக்குமாறு வடநாட்டிலிருந்து பல பிராமணர்களை வரவழைத்துக்
குடியேற்றினான். கல்விமான்களிடத்திற் பற்றுடையவன். இவன் காலத்திற்றான்
நம்பியாண்டார் நம்பிகளும் கண்டராதித்த தேவர் முதலிய திருவிசைப்பா
வுடையாரும் பிறருமிருந்தார்கள். திருமறை கண்ட சோழனுமிவனே.
கி.பி. 985 முதல் 1012 வரை ஆட்சி புரிந்தானென்று சாசன பரிசோதகர்கள்
தீர்மானிக்கிறார்கள். கொங்கு இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த தென்பதை
இவன்ாச்சியவருஷம் வாழவந்தி நாட்டைச் சேர்ந்த