பக்கம் எண் :

70

தூசியூரில் ஒரு மழவராயனால் திருக்கற்றளியுடைய பரமேசுரர் கோவிலுக்கு
ஏற்படுத்திய வரி, ஈழத்துப் போரில் மாண்ட தன் தந்தையின் தாகசிரம
பரிகாரத்துக்காக வெட்டிய கிணறு முதலியவற்றை குறிக்குஞ்சாசனங்களாலும்
ஒற்றியூரன் பிரதி கண்டவன்மன் அமன்குடி அல்லது கணபதி நல்லூரில்
கொடுத்த நிலம், குளத்தின் சாசனங்களாலும் (S.S.1. VOI. III) நன்கு
காணலாம். அந்நாளில் தான்கொங்கு நாட்டிற் பாடல்பெற்ற தலங்களில்
ஆக மோக்தமாகப் பூஜை முதலியன நடைபெறும் பொருட்டுத்
தன்னாட்டிற்றேர்ந்த பண்டிதர்களை அழைத்து வைத்து அவர்களுக்கு
வேண்டிய காணி பூமியும் கௌரவங்களும் கொடுத்தனன். இந்த ராஜராஜ
தேவர் தன்னாட்டிருந்து அழைத்துக் குடியேற்றியவருக்குத் தன் பெயரான
"குலசேகரப் பட்டன்" எனப் பெயர் கொடுத்தனன்.

     இந்த ராஜ ராஜ தேவர்க்குக் குலசேகரன் என்னும் பெயர் உண்டு
என்பதைத் திருமுறை கண்ட புராணம்.

                         (மேற்)

உலகுபுகழ் தருசைய மீது தோன்றி யோவாது வருபொன்னி
                                  சூழ்சோணாட்டிற்
றிலகமென விளங்குமணி மாடவரூர்த் தியாகேசர் பதம்
                          பணிந்து செங்கோலோச்சி
யலகில்புகழ் பெறுராச ராசமன்ன னபயகுலசேகரன்பா
                                    லெய்து மன்ப
ரிலகுமொரு மூவரருள் பதிகமொன்றொன் றேயினிதி னுரை
                            செய்ய வன்பாற் கேட்டு

     "கொங்கு குலசேகரனாங் கோன்பால் வந்து குஞ்சரத் தோனருள்
செய்த கொள்கை யெல்லா, மண்டுபெருங் காதலினாற் சொல்லி"
என்பனவற்றால் விளங்குகிறது. இதன்பின்,

     கோவிராஜகேசரி பன்மரான திரிபுவன சக்கிரவர்த்திகள் உடையார்
ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் என்பவன் மிகுந்த பராக்கிரம முடையவனாக
ஆட்சிக்கு வந்தனன். இவன் காலத்து வடக்கே கங்கை - தெற்கேஈழம் -
மேற்கே சமுத்திரம் - கிழக்கே கடாரம் (பர்மா) வரையிலும் செங்கோல்
செலுத்தி வந்தான். சுங்கங்களைத் தவிர்த்தான். நில அளவு செய்து
ஆறிலொரு கடமை ஏற்படுத்தினான். ஏரிகால்வாய் வெட்டினான்.
காடுகளை வெட்டிப் பட்டணமாக்கினான். பல சிவாலயம் விஷ்ணு
வாலயங்கள் கட்டுவித்தான். பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான்.