பக்கம் எண் :

71

இவன் மிகுந்த கல்வி மானாக இருந்ததன்றிக் கற்றோர்க்கு உதாரன். இவன்
காலத்திற்றான் சேக்கிழார் பெரிய புராணம் பாடினார். விசிஷ்டாத்வைத
மதஸ்தாபக ரான ஸ்ரீராமாநு ஜாசாரியரிருந்தார். இவ்வரசனால் தனக்குத்
தீங்கு நேருமென நினைந்து தான் போஜள ராஜ்ஜியத்ற்கு போய்
ஒளித்திருக்க நேர்ந்தது. இக்குலோத்துங்கன் சுத்த சைவனாயினும்
வைஷ்ணவ, ஜைன, பௌத்தக் கோவில்கள் தோறும் இவன் சாசனங்களைக்
காணலாம். கி.பி. 1070 முதல் 1118 - வரை ஆட்சி புரிந்திருக்கிறான் என்பர்.

சென்னியபயன் குலோத்துங்க சோழன் றில்லைத் திருவெல்லை
பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறென்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமா னனபாயன் வருந்தொன் மரபின் முடிசூட்டுந்
தன்மை நிலவு பதியைந்தி னொன்றாய் விளங்குத் தகைத்தவ்வூர்

                                        
                                        
(பெரியபுராணம்)

     இந்தக் குலோத்துங்க சோழவேந்தன் திருச்செங்கோட்டிற்
பூசித்துள்ள ஆலம்பாயன கோத்திரத்தானான குலசேகர பட்டனுக்குச்
சகாயமாகப் (பெண் கொள்ளல் கொடுத்தலுக்குக்) காசிப கோத்திரத்து
விற்பன்னரான ஒரு சிவாசாரியருக்குக் "குலோத்துங்க பட்டன்" எனத்
தன்பெயரும் பிற ஆதிக்கமுந் தந்து வாழ்ந்திருக்கச் செய்தனன்.

காரணிக மான வளவன்கலி யுகாதியிற் கட்செவி
                            மலைப்பரமனைக்
     கந்தனை வணங்கிமக பூசையுண்டாக்கினன் கைலாச
                               நாதசிவனைத்
தாரணி புகழ்ந்திடத் தாபித்தனன் பெரிய தண்கூப
                               மதுகண்டனன்
     சைவ மறையோர்பூச னைக்கினியராகவே தனதுமண்
                                டலமேவியே
சீரணி சீகாழியா லம்பாயர் காசிபர் திறத்தொடர்ச்சனை
                                   செய்யவே
     திறமுற வமைத்தனன் மநுநீதி முறைகண்ட செம்பியன்
                               பெற்றபெருமை

(திருச்செங் கோட்டுத் திருப்பணி மாலை)

     இதனால் நன்கு விளங்கும். இது போலவே கொங்கு மண்டலத்துள்ள
மற்ற தலங்களிலும் நிறுவினான். சோழன் குடியேற்றிய சிவத்விஜர்களுக்கும்
முன்னம் இங்கிருந்தவர்களுக்கும் சில சாம்பிரதாய பேதங்களிருக்கின்றன.
அவர்கள் கிராமாந்தரங்களில் பூஜகர்