பக்கம் எண் :

75

கொள்ளைக்களனாகவு மாறிவிட்டது. இனிப் பொறுக்க முடியாது.
தென்னவனது சினந்த கட்டளைகள் பல வருகின்றன எனவும் கேளாமையால்,
தன் சேனையை ஏவிச் சோழர் படையைப் பிளவு படுத்திப் பல முகமாகத்
திரும்பி ஊர்புகும்படி வெருட்டி விட்டனன். படைமிகுந்த அலங்கோலப்பட்டு
விட்டது.

                       (மேற்)

ஆறெல்லாஞ் செந்நீ ரவனியெலாம் பல்பிணங்கள்
தூறெல்லாஞ் சோழன் சுரிகுஞ்சி - வீறுபெறு
கன்னிக்கோ னேவலினாற் காரைக்கோன் பின்றொடரப்
பொன்னிக்கோ னோடும் பொழுது.

                                        (பழம்பாட்டு)

எனப்பாடி இருக்கிறார்கள். இந்த வெற்றியைப் பெற்றுவந்த சேனைத்
தலைவனை வியந்து பாராட்டிப் பலவிருது சன்மானங்களை உதவி மகிழ்ச்சி
பொருந்தி நீ ஒரு நல்ல சேனாபதி என்று பாண்டியன் மிகு கௌரவமாகக்
கூறினன். இவன் சந்ததியார் இந்த நல்லசேனாபதி என்ற பெயரை நாளும்
அடுத்தடுத்து இட்டு வழங்குகிறார்கள்.

     ஜடாவன்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251 - ல் பட்டந்தரித்தவன்.
இந்தச் சதகச்செய்யுளில் நான்காமடியில் மன்றாடி எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இப்பெயர் இக்காலத்துச் சில ஜமீன்தாரர்களும், பட்டக்காரர்கள் என்கிற
தலைவர்களும் தங்களுக்கிட்ட பெயர்களின் இறுதியில் மன்றாடி என்பதைக்
கூட்டி வழங்கி வருகிறார்கள்.

     இந்த மன்றாடி என்பது மிகப்பழமையான காலத்துள்ள பட்டப்
பெயராதலின் இதை நன்கு விசாரிக்கலாம்.

     ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோபர கேசரி பன்மர்க்கு யாண்டு
பதினைஞ்சாவது கச்சப்பெட்டு பெரிய திருக்கற்றளி மஹாதேவர்க்கு
சண்டபராக்கிரம மன்றாடியேன் எழுத்து. திருக் கற்றளி தேவர்க்கு மூன்று
நோந்தாவிளக்கு சந்திராதித்தர் உள்ளளவும் சண்டபராக்கிரம வீர வைத்த
சாவா மூவாபேராடு இருநூற்று எழுபது. இவ்வாட்டால் நிசதி மூவுழக்கு
நெய்கொண்டு சென்று உண்ணாழிகை உடையவர்கள் கையில் நாலுழக்கு
வழுவாத நாழியால் என்மக்கள் மக்கள் வழிவழி என்றும் அட்டுவேன்.
அட்டேனாயில் தர்மாஸனத்தில் நிசதி நாலேகால் தண்டப் படுவேனாவேன்.
இத்தண்டப்பட்டும் இந்நெய்முட்டாமே ஆட்டு