பக்கம் எண் :

76

வேனாவேன். முட்டில் அன்றாள் கோவுக்கு நிசதி மஞ்சாடி பொன் மன்ற
ஒட்டிக் கொடுத்தேன்.......... (S.I.1. Vol. I.) இது காஞ்சிபுரம் கைலாசநாதர்
கோயில் பிள்ளையார் மண்டபத்துள்ளது. (No. 82) ராஜஸிம்ம வர்மேசுவர
சிரேணியுள்ள (No. 83) சாசனமும் இதுபோலவே உள்ளது...... ஜயங்கொண்ட
சோழமண்டலத்து பெரும் பாணப்பாடி கரைவழி திருவல்லமுடைய
மஹாதேவர்க்குப் பல்குன்றக்கோட்டத்து செங்குன்ற நாட்டு கலவையான
உலகளந்த சோழ சதுர்வேதி மங்கலத்து மன்றாடி அரையராமன்
மண்டகவனான அரசரணாலயக் கோனேன் இத்தேவர்க்கு வைத்த திருநுந்தா
விளக்கொன்றுக்கு வைத்த சாவா மூவா பேராடு தொண்ணூற்றாறு".
S.I.I. Vol. III Part - I. சோழதேசத்துள்ள திருவிடை மருதூர் (203 - 1907)
சாசன முதலியவற்றுள்ளும் காணலாம்.

     திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்து பாப்பகுத்த
திருவிளையாடலில்,

                    (மேற்)

என்றுமன்றாடி சொல்ல ஏடநீ என்ன சொன்னாய்
மட்டவிழ்பூம் பொழில் புடைசூழ் மாமதுரை யூர்ப்பொதுவன்
கிட்டர் புகழ் தருமண்டன் சிற்றிடைச்சி மணவாளன்
விட்டபசு முட்டாமன் மேய்த்தடக்கிப் பாசத்தாற்
கட்டிவிடு மன்றாடி கான்மாறி யானாவேன்.

     இவைகளால் மன்றாடி என்பது ஆடுமாடுகளை வளர்ப்போர்
(இடையர்) களுக்கு வழங்கிவந்ததாகத் தெரிகிறது. பழைய கோட்டைப்
பட்டக்காரர் 'முன்னோர் காலமுதல் பயிர்த்தொழிலுடன்
பசுவோம்பலிற்றேர்ந்தவர்கள். இதற்கு ஏற்றபடியே பழயகோட்டையில்
இப்பொழுது வாழும் பட்டக்காரர், ராய்பஹதூர் நல்லதம்பிச் சர்க்கரை
உத்தமக் காமிண்ட மன்றாடியார் ஆயிரக்கணக்கான பசுக்களை நன்கு
ஓம்பிவருகிறார். இவற்றை நோக்குமாறு 1916-ம் வருஷத்தில் சென்னை
கவர்னர் ஆங்குச் சென்று நோக்கி மகிழ்ந்தனர். அன்னார் எழுதிவிடுத்த
ராஜபத்திரம் இது :-

     I wish to thank the pattagar for his hospitable welcome
and for the pleasure of seeing his fine cattle. He is doing
splendid work for the farm stock of the Presidency and, in this
he has my cordial good wishes. His example may I trust be
followed by others.

Palayakotta.                                  (Sd.) PENTLAND.
24-10-1916                                  Governor of Madras.