(க-ரை)
உலகம் புகழுமாறு காஞ்சிபுர நகரத்தில் அவதரித்துப் பின்
மனவருத்தங்கொண்டு பவானிநதி தீரத்துள்ள சத்திய மங்கலத்திற் குடியேறிப்
பரமத பங்கம் என்னும் ஒள்ளியநூல் கூறுதற்கு விளக்கமுற்றது கொங்கு
மண்டலம் என்பதாம்.
வரலாறு
: கலியுக சகாப்தம் 4370 (இங்கிலீஷ் 1268 - 9) சுக்கில
வருஷத்தில் காஞ்சிமா நகரில் வேங்கடநாதர் அவதரித்தனர். வடமொழி
தென் மொழிகளில் வல்லவராய் கவிதார்க்கிக சிங்கம் எனவும் வேதாந்த
தேசிகர் எனவும் பெயர்பெற்றார். பல அருமையான பிரபந்தங்கள்
பாடியுள்ளார். திருச்சினாப் பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டு
மஹமதியர் கொடியேற்றினார்கள். அப்பொழுது ஸ்ரீ ரங்கநாதர்
கோவிலுள்ளும் புகுத ஆரம்பித்தார்கள். அதனாலும் கந்தாடை
லட்சுமணாசாரியர் சிஷியர்கள் தேசிகரைக் காலைப் பிடித்து வீதியில்
இழுத்துத் துன்புறுத்தலான கொடுமைகளுக்குச் சகிக்காமலும், அப்பொழுது
தோன்றியுள்ள துலுக்க ராஜ கலக காரணமாகவும் அந்நாட்டை யகன்று
கொங்கு மண்டலத்தில் பவானிநதி தீரமான சத்திய மங்கலத்தில் குடியேற
நேர்ந்தது. அங்கு எழுந்தருளியுள்ள பெருமாளைச் சேவித்துக்
கொண்டிருந்தார். ஏனைய மதங்களைக் கண்டித்து, வைணவத்தை ஏற்றவல்ல
சுருக்கமான நூல் இயற்ற வேண்டுமென்ற கருத்து விளக்குமுற்றுப்
பரமதபங்கம் என்னும் பெயரால் ஒருநூல் இயற்றினர் என்பர். அது 54
பாசுரங்களை யுடையது.
தேசிகப்ரபந்தம்
பரமதபங்கம்
(மேற்)
கோதவமொன்
றில்லாத தகவே கொண்ட
கொண்டலென வந்துலகி லைவர்க் கன்றோர்
தூதுவனா யொருகோடி மறைகளெல்லாந்
தொடர்ந்தோடத் தனியோடித் துயரந்தீர்த்த
மாதவனார் வடகொங்கின் வானியாற்றின்
வண்ணகைநன் னடங்கண்டு மகிழ்ந்துவாழும்
போதிவை நாம் பொன்னயிந்தை நகரின் முன்னாட்
புணராத பரமதப்போர் பூரித்தோமே. |
தேசிக
பிரபந்த வியாக்கியானக் கர்த்தர் வடகொங்கு - வானியாறு
என்பவற்றிற்கு வேறுபொருள் கூறுகின்றனர்.
|