பக்கம் எண் :

94

சபைக்குப் பெரிய நம்பி முதலானவர்களுடன் சென்றார். முதலியாண்டான்
முதலியவர்களுடன் வெள்ளை சாத்திக் கொண்டு மாறுவேடமாக உடையவர்
மேல் நாட்டுக்குப் புறப்பட்டனர். வழி நடந்து கொல்லிமலைத் தொடர்
நீங்கி லத்திவாடி (செருக்கலைக்) கிராமத்தில் சில வேட்டுவர்களால்
உபசரிக்கப் பெற்று, பழவகை முதலியன உதவக் களை நீங்கிச் சமீபத்தில்
அக்கிராமமிருக்கிறது, அங்கு உங்களுக்கு ஆகாரத்துக்கு இடம்
செய்கிறோமென்று அழைத்து வந்து ஒரு வீட்டில் இருத்தினார்கள்.
அவ்வீட்டு அம்மையார் இவ்வைணவர்களைக் கண்டு உவந்து முறைப்படி
வணங்கி, உடையவரிடத்து அடியாள் சமஸ்காரம் பெற்றுளேன் தளிகை
செய்கிறேன் அமுது செய்தருளள் வேண்டுமென்று கனிவாக வேண்டினள்
அம்ம! எவ்விடத்து உடையவரைச் சேவித்துக் கொண்டனை என ஒரு
வைணவர் கேட்டனர்.

     பனிரண்டு வருஷம் மழை பெய்த லொழிந்து கொங்கு நாடு கடும்
பஞ்சமுற்றது. ஸ்ரீரங்கத்தில் சதிபதிகளிருவரும் வாழ்ந்தோம். அந்நாள்
எம்பெருமானார் மாதுகர பிக்ஷைக்கு வருவதை மேல் மாடியிலிருந்து
கண்டேன். மன நெகிழ்ச்சி கொண்டு உடனே கீழே வந்து பிக்ஷையிட்டுச்
சேவித்தேன். உபதேசித்தனர். அது முதலாக அம்மந்திரத்தை ஜபித்துக்
கொண்டிருந்தேன். சில பகல் கழியவே, கொங்கு நாடு செழிப்புற்று எனக்
கேட்டு, எம்பெருமானார் சந்நிதியை அடைந்து அநுக்கிரகித்த மந்திரத்தை
மறந்தவளானேன். உபதேசித்தருளல் வேண்டுமென விண்ணப்பித்தேன்.
முறைப்படிக்குச் சமாசிரணம் அருளினர், நித்யப்படி பூசித்தற்குச் சுவாமிகள்
பாதுகை வேண்டுமென்றேன். உவந்து தமது திருவடி நிலையைப்
பிரசாதித்தனர். அதைப்பெற்ற நாள் முதல் பூசித்து வருகிறேன் என்றனள்.
ஆனால் அவர் உபதேசித்த மந்திரத்தை என்னிடத்து சொல் என்று
இராமாநுஜர் கேட்டனர். சொல்லாவிடில் வைணவ ப்ராமணர்கள்
புசிக்கமாட்டார்களே எனப்பயந்து அவர் காதில் மெதுவாகக் கூறினள்.
அப்படியானால் இங்கு உள்ளவர்களுள் உமக்கு உபதேசித்தவர்
இருக்கிறாரா? என்று வைணவர் வினவினர். எல்லாரையும் நன்றாகப் பல
முறை கவனமாகப் பார்த்து, உடையவரைக் குறித்து, சுவாமிகள் தான் என
நினைக்கிறேன்; ஆனால் அவர்கள் காஷாயம் திரிதண்ட தாரியாக இருக்கக்
கண்டேன் என்றனள். பாதுகையை எடுத்துவர அருளிய உடனே
இருகரத்தாலுந் தாங்கி வந்தனள். சரியாகவே இருக்கக் கண்டார்கள்.
திருவமுது செய்யுமாறு நியமனம் புரிந்தனர்.

     அமுது கொள்ளுமாறு பிராட்டியார் அழைத்தனள். எனது பாதுகைக்கு
நிவேதனமான பதார்த்தத்தை நான் உட்கொள்ளுதல்