வரலாறு
:- நரை திரை போக்கும் மூலிகை கஞ்சமலையிலிருபதாகக்
கேள்வி யுற்ற மூலன் என்னும் ஒரு பார்ப்பான், அம்மலை மேலுள்ள
கருங்காட்டிற் சென்றான். அவன் மாணாக்கன் சமயல் செய்யும் பொழுது,
சமீபத்துக்கிடைத்த ஒரு கோலை யெடுத்து உலைச்சோற்றைக் கிளறினான்.
அக்கோல் கருநெல்லிக் கோலானதால் அன்னங் கறுத்துப் போய்விட்டது.
அன்னங்கெட்டுப் போனதற்காகக் குரு சினங்கொள்வாரே என்று சீடன்
பயந்து, நிறம்மாறிய அன்னத்தைப் புசித்துவிட்டு, வேறே சமைத்து
வைத்தான். அவ்வன்னத்தைப் புசித்த சீடன் நரைதிரை நீங்கி யவ்வன
புருஷனானான். குருவுக்குப் பயந்து ஒளித்துக் கொண்டான், குரு வந்து
தேடிச் சத்தமிட்டுக் கூப்பிட்டான். பயந்த மாணாக்கன் மெல்ல எதிரில்
வந்து நின்றான். குறிப்புத் தெரியவில்லை. தன் மேனி மாறுபட்ட
காரணத்தைச் சொன்னான். அன்னத்தைத் துழாவிய கொம்பு எங்கே என்று
குருகேட்க, முறித்து அடுப்பில் வைத்தேன் எரிந்துவிட்டது எனச்சீடன்
சொன்னான்.
குரு
மெத்த வியாகூலமுற்று, வாயில் விரலைவிட்டுச் சீக்கிரம்
வாந்தி செய்யச் செய்து, சீடன் கக்கிய உணவைக் குரு உண்டு வாலிபனாக
மாறினான்.
கரபுநாதர்
புராணம்
அந்தமா
ணாக்கன் றன்னை யடுகைநீ செய்யேன் றோதி
புந்தியின் மருந்து தேடிப் போயின னயலிற் சீட
னுய்ந்திடக் கருநெல் லிக்கொம் பொன்றினா லனந்துழாவ
வெந்தனங் கரிபோ லாக வெருவியன் னத்தை யுண்டான் (15)
நரைதிரை
மாறி மேனி நடந்தவீ ரெட்டாண் டேபோற்
புரையிலா வழகு பெற்றுப் புடமிடு பொன்போ லானான் (16)
துழாவிய
கொம்பெங் கென்றான் கல்லியிற் போட்டே னென்ன
வழாதுநீ யுண்ட சோற்றை வாயினிற் கக்கென் றோத
விழாதசோ றதனைக் கக்க மிச்சிலைக் குருவு முண்டான்
றொழாரெவ ரிவர்க டம்மைச் சுந்தரப் பால ரானார். (19)
கஞ்சமலைச்
சருக்கம்.
|
|