|
மன்னர் நடுவு அணைய வந்து இருந்தான் -
மணம் பொருந்திய அழகிய மலர்மாலையணிந்த
அரசர்கள் சூழ்ந்த நடுவிடத்தில் சார்ந்து
வீற்றிருந்தான்.
(க - து.) சுயம்வர மண்டபத்தில்
நளமன்னன் வந்து, பல மன்னர்கட் கிடையில்
சார்ந்து தங்கியிருந்தான் என்பதாம்.
(வி - ரை.) கன்று - ஆன் கன்று
முதலியன. அவை இளம் பருவத்தினவாகலான்
நீலமலர்களைக் கறித்து ஆங்காங்கே குதட்டிக்
கக்கிவிடுகின்றன. கருங்குவளை கருநிறமாக
இருத்தலால், அம்மலர்களின் சிதைந்த இதழ்களும்,
மலர்களும், வீட்டு வாசல்களில் கிடப்பன,
மகளிர்தம் அறுகுறைச் சிறுபார்வை போற்
காட்சியளிக்கின்றன. எனவே, நீல மலர்கள் மிக்கு
வளர்ந்து செழித்துள்ள தன்மையை உணர்த்தி நாட்டின்
நீர் நிலவளத்தைக் குறித்தவாறாம். இக்கருத்தோடொப்ப
ஆசிரியர் இளங்கோவடிகளார் சிலப்பதிகாரக் கானல்
வரிப்பாட்டினும், 1‘.........மெல்விரலாற்
கொண்டோச்சும் குவளைமாலைப், போது
சிறங்கணிப்பப் போவார்கண் போகா’ என்றார்.
அந்நாட்டுக்குரியவனாதலின், ‘நீலம்.........நேர்நாடன்’
என்றார். இவ்வாறான பல்வகை மலர்கள் தங்கியுள்ள
நாட்டையுடைய வேந்தன், தமயந்தியின்
பெருவிழிக்குத் தவஞ்செய்தான் என்றார். அஃதாவது
அவள் காதற்பார்வையையே விரும்பி ஏக்கற்று
இருந்தான் என்னும் தன்மையைச், ‘சிறுவிழிக்கு
நோற்றிருந்த சேய்’ என்னுஞ் சொற்றொடரால்
குறித்தார். சிறுவிழி : நாணத்தை உள்ளடக்கிக்
காதலாற் பார்க்கும் அன்பு கனிந்த பார்வை.
நீலம் : அந்நிறத்தையுடைய மலரைக்
குறித்தலால் பண்பாகு பெயர். சேர் -
செந்நிறமுடையான். அஃது ஈண்டு நள மன்னனைச்
சுட்டிற்று. (128)
தமயந்தி, சுயம்வர மண்டபம் அடைதல்
136. நித்திலத்தின் பொற்றோடு
நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தர்க்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அணங்கு.
(இ - ள்.) அருங்கேழ் மணிப்பூண்
அணங்கு - சிறந்த நிறத்தையுடைய மணியானியன்ற
அணிகளை அணிந்த தெய்வப்பெண்
1. சிலப், 7 : 7.
|