பக்கம் எண் :

மூலமும் உரையும்215

நளன், சோலைவண்டுகள் ஒலிப்பதைத் தமயந்திக்குக்
காட்டிக் கூறல்

182. மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையம்
பொங்கி யெழுந்த பொறிவண்டு - கொங்கோ
டெதிர்கொண் டணைவனபோல் ஏங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.

(இ - ள்) முத்தின் கதிர்கொண்ட பூண்முலையாய் - முத்து மாலைகள் ஒளியெறிக்கப் பிற அணிகளும் அணிந்த கொங்கைகளையுடையாய்! மங்கையர்கள் வாசமலர் கொய்வான் வந்து அடைய - பெண்கள் மணமுள்ள மலர்களைப் பறித்தற்பொருட்டு வந்து சேர்தலினால், பொங்கி எழுந்த பொறி வண்டு - (அதிலிருந்து) மேலோங்கிப் பறந்த புள்ளிகளையுடைய வண்டுகள், கொங்கோடு எதிர்கொண்டு அணைவனபோல் ஏங்குவன காண் - தேனினைக் கொண்டு (அவர்களை) எதிர்கொண்டு அழைக்கச் சேர்வன போன்று ஒலித்தலை நீபார்.

(க - து) ‘முத்தின் கதிர்பரப்பும் அணிகளணிந்த பெண்ணே! பெண்கள் மலர் கொய்வதற்கு வந்து சேர்தலினால், அதிலிருந்து மேலே பறந்த வண்டுகள் ஒலிப்பன, அவர்களை எதிர்கொண்டழைத்துச் சேர்வனபோல் தோன்றுதலைப்பார்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) மங்கையர்கள் - நளனுடன் செல்கின்ற பரிவார மகளிர்கள். கொய்வான் - கொய்வதற்கு: வானீற்று எதிர்கால வினையெச்சம். கொங்கு - தேன். 1 ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்றவிடத்துக், கொங்கு இப்பொருள் தருதலை ஓர்க. அன்றி, மணமென்றலுமாம். பொறிவண்டு-வண்டுகளில் ஒருவகையான புள்ளிகளையுடைய வண்டுக் கூட்டங்கள். அவை பறப்பன, புதிதாக வந்தவரை வரவேற்பது போன்றும், ஒலிப்பன ‘வாருங்கள்’ என அழைப்பன போன்றும், அவைகளின் கால் முதலிய உறுப்புக்களில் தேன் ஒட்டிக்கொண்டிருப்பதை, அவர்கட்கு விருந்தூட்டக் கொணர்ந்த உணவு போன்றும் குறிப்பான் உணரவைத்துப் ‘பொறிவண்டு .......................ஏங்குவன’ என்றார்.

இவ்வாறே நம்பியாரூரராகிய சுத்தரர், தில்லைக்கு ஆண்டவனது, எல்லையில் தனிப்பெருங் கூத்தின் இன்பத்தைத்

1. குறுந்தொகை: 2.