பக்கம் எண் :

216நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

திளைக்கச் செல்லுங்கால், வழிநெடுக இருமருங்கினும் சோலைகள் அவைகளுட் பறவைகள்; தடாகங்கள்; அதிலுள்ள மலர்கள் முதலிய காட்சிகளையெல்லாம் கண்டுகொண்டே செல்கின்றார். அங்கே மற்றோர்பால், வண்டுகள் தாழைமடலின் தண்பூக்களிற் படிந்து அதிலுள்ள வெண்ணிறப் பூந்தாதுகள் உடலெல்லாம் படியத் தேனுண்டு களித்துப் பறந்து இனிய குரலெழுப்பிப் பாடிக்கொண்டு செல்கின்றன. அக்காட்சி, சுந்தரர்க்கு ஆண்டவன் அடியவர்கள் நீராடித் திருவெண்ணீறணிந்து இறைவன் புகழைப் பாடிக்கொண்டு செல்வதுபோல் தோற்றமளிப்பதாகக் கண்டு களித்துக்கொண்டே சென்றாரென்று சேக்கிழார் பெருமான் தொண்டர் புராணத்துட் குறிப்பிடுகின்றார். அக்கருத்து இதனோடு ஒத்ததாக இருத்தலின், அப்பாவை ஈங்கே குறிக்கின்றோம். கண்டு ஒப்புநோக்கி மகிழ்க.

1 .......................................................

குண்டகழ்க் கமல வண்டலர் கைதைத்

துன்று நீறுபுனை மேனிய வாகித்

தூய நீறுபுனை தொண்டர்கள் என்னச்

சென்று சென்றுமுரல் கின்றன கண்டு

சிந்தை யன்பொடு திளைத்தெதிர் சென்றார்’

என்பது அது. (4)

நளன், தமயந்திக்குப் பெண்கள் அடியில் பூங்கொம்புகள்
தாழ்வன காட்டுதல்

183. பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய் காண்என்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.

(இ - ள்.) மின் நெடுவேல் கையான்-ஒளிபொருந்திய வேல் தாங்கிய கையையுடைய நளமன்னன், பூகுழலாய் - பூ முடித்த கூந்தலையுடையாய், பாவையர் கைதீண்டப் பணியாதார் யாவரே-பதுமை போன்ற அழகினரான பெண்களின் கையால் தொடின் தாழாதவர் (உலகில்) யாவருளர்? அப்பூகொம்பு-அந்தப் பூவினையுடைய கிளைகள், பூவையர் கைதீண்டலும் விரைந்து மேவி அவர் பொன் அடியில் தாழ்ந்தன - பெண்களின் கைகளினால்

1. பெரியபுரா, தடுத்தாட் : 96.