பக்கம் எண் :

மூலமும் உரையும்217

தொட்டவுடனேயே விரைவில் வளைந்துசென்று அவர்களின் அழகிய பாதங்களில் பணிவன ஆயின.

(க - து.) ‘பூங்குழலாய்! பெண்கள் கையால் தொடின் வணங்காதவர் யார்? அப்பெண்கள் கையால் தொட்டவுடனேயே பூங்கொம்புகள் வணங்கிவந்து அவர்கள் காலடிகளில் விழுகின்றன பார்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) பாவை போன்றாரைப் பாவையரென்றது, ஆகுபெயர். பணிதல்-வணங்குதல். 1‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றவிடத்தும் இப்பொருள் தருதலை ஓர்க. பொன் அடி - அழகிய கால். அல்லது பொன்போன்ற நிறமும் பெருமையும் பொருந்திய அடிகள் என்றுரைத்தலுமாம். வேல், ‘மின்னெடுவேல்’ என அடைகொடுத்துக் கூறப்பட்டது. நளன்றன் வெற்றிப் பெருமிதம் தோன்றற்கு. 2‘திருந்துவேற் குமணன்’ எனப் புறநானூற்றினும் கூறினார். (5)

நளன், தமயந்திக்குப் பூக்கொய்வாள் ஒருத்தியின் முகத்தில்
வண்டுகள் படிதலைக்காட்டல்

184. மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.

(இ - ள்.) மலர்கொய்வாள் மங்கை ஒருத்தி - பூக்கொய்பவளாகிய பெண் ஒருத்தியின், வாள்முகத்தை - ஒளிவிடுகின்ற முகத்தினை, பங்கயம் என்று எண்ணி - செந்தாமரை மலரெனக் கருதி, படிவண்டை - மொய்க்கின்ற வண்டுகளை, செம்கையால் காத்தாள் - தன் சிவந்த கைகளினால் தடுத்து நின்றாள், அக் கை மலரை காந்தள் எனப் பாய்தலும் - அந்தத் தாமரைமலர் போன்ற கைகளையும் (அவை) காந்தள் மலரெனக் கருதி மொய்த்தவுடனே, வேர்த்தாளை - (அச்சங்கொண்டு,) வியர்வை நீர் துளிக்க நின்றவளை, வேந்து காண் என்றான் - நளமன்னன் நீ பாரென்று தமயந்திக்குக் காட்டினான்.

(க - து.) ‘பெண்ணொருத்தி மலர் கொய்கின்றாள்; அவள் முகத்தை வண்டுகள் தாமரை மலரென்று கருதி

1. திருக்குறள் : 125. 2. புறம் : 163.