|
மொய்க்க, அவைகளைத் தன் கையால்
தடுக்கிறாள்; அக் கைகளையும் அவை காந்தட் பூக்கள்
என்று எண்ணி மொய்ப்பதைப் பார்’ என்று, நளன்
தமயந்திக்குக் காட்டினான் என்பதாம்.
(வி - ரை.) மலர் கொய்கின்ற
பெண்ணோருத்தியின் முகத்தையும் கைகளையும்
வண்டுகள் தாமரை மலரெனவும் காந்தள்மலரெனவும்
கருதி மயங்குதலால் மயக்கவணி. படிவண்டு:
வினைத்தொகை. அக் கைமலரையும் எனற்பாலது, ஈண்டுச்
செய்யுள் இசைநோக்கி எச்ச உம்மை மறைந்து
நின்றது. மலர்க்கை: கைமலர் என வந்தது சொன்னிலை
மாறிய இலக்கணப் போலி. அச்சமுற்றார்க்கு உடல்
நடுக்குறுதலும் அதனால் வேர்வரும்பலும்
இயற்கையாதலின் ‘வேர்த்தாளை’ என்றார். (6)
நளன், தமயந்திக்கு மலர்கொய்யாது
தளிரைக் கொய்பவளைக்
காட்டல்
185. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக்
கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.
(இ - ள்.) செம்மலரில் தேனே -
செழித்த தாமரைமலரில் வீற்றிருக்கின்ற
திருமகள் போன்றவளே! புல்லும் வரிவண்டைக்
கண்டு-(ஓர் மலரில்) தம் துணையாகச்
சேர்ந்திருக்கின்ற வரிகளையுடைய (ஆண், பெண்)
வண்டுகளைப் பார்த்து, புனமயில்போல் - வனத்தில்
வாழ்கின்ற மயிலைப்போன்று, செல்லும் மடந்தை -
போகின்ற பெண்ணொருத்தி, சிலம்பு அவித்து
மெல்லப் போய்தன் காற்சிலம்பொலி
கேட்காதவாறு அடக்கிக்கொண்டு பைய நடந்து சென்று,
அம் மலரைக் கொய்யாது - அந்த மலரைக்
கொய்யாமல், அரும் தளிரைக் கொய்வாளைத் தெளி -
அரிய தளிர்களைக் கொய்கின்றவளை அறிவாயாக.
(க - து.) ‘பூவினிற் கலவியில்
திளைத்துக் களித்திருக்கும் வண்டை கண்டு மெல்லச்
சென்று அப்பூவைக் கொய்யாமல் தளிர்களைக்
கொய்கின்ற தையலாள் ஒருத்தியைப் பார்’ என்று
நளன் தமயந்திக்கு காட்டினான் என்பதாம்.
|