|
(வி - ரை.) காலிலணிந்துள்ள சிலம்பு
‘கல்’லென்றொலித்தால் கூடிக் களித்திருக்கும்
வண்டுகட்கு இடையூறாமெனக் கருதி மெல்ல நடந்தாள்
என்பாராய்ச் ‘சிலம்பவித்து’ என்ற சொல்லால்
விளக்கினார். வண்டு காதறிவில்லாதது என்பது
ஆன்றோர் கண்டறிந்த உண்மை. அஃது இதற்கு
மாறாகாதோவனின்? ஒரு சில ஆசிரியர்கள்
வண்டிற்குக் காதறிவுண்டென்றே கருதுகின்றனர்!
இவர்க்கும் அஃது, உடன்பாடுபோலும்!
தொல்காப்பியரும் நன்னூலாரும்.
‘1நண்டும் தும்பியும் நான்கறி வினவே’
எனவும்,
‘2தும்பி வண்டாதிகண் அறிவின்நா
லறிவுயிர்’
எனவும் கூறி, வண்டுகளெல்லாம்
செவியறிவில்லாத நாலறிவுயிரெனக் கொண்டனர்.
அகநானூற்றாசிரியர் ஒருவர், தலைவன் ஒருவன்
போர்முடித்து விரைபரித் தேரூர்ந்து வருகின்றான் ;
வரும்வழிகள் எங்கும் செடியும் கொடியும் மரங்களும்
மலர்ப் பூங்கொம்பரும் செறிந்த பெருநிலப்
பரப்பு. அதன்வழியிற் செல்லுங்கால், குதிரைகள்
கழுத்திலணிந்த மணிகளின் பேரொலிகேட்டு
வண்டுகள் அஞ்சுமெனக் கருதி மணிகளைக் கட்டச்
செய்து ஊர்ந்துவந்தான் என்று கூறுகின்றார்.
அத்தொடர்,
‘3பூத்த பொங்கர்த் துணையொடு
வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்’
என்பதாகும்.
‘4மங்கை நல்லவர் கண்ணும்
மனமும் போன்று’
என்னும் சிந்தாமணிப் பாட்டிற்கு
நச்சினார்க்கினியர் வண்டிற்குச்
செவியறிவுண்டென்பதற்கு இவ்வகநானூற்று அடிகளையே
காட்டியதூஉம் காண்க. நங்கையின் அழகும் சாயலும்
இயற்கை நற்பண்பும் தோன்றப் ‘புனமயில்போல்’
என்றார். நற்பண்பு, ஓரறிவுயிர்க்கும்
இரக்கங்கொள்ளும் உள்ள உயர்வு. மலர்கொய்யப்
போந்தாள் எது எப்படியானால் என்ன? வண்டுகள் கூடிக்
களித்திருந்தாலென்ன? களிக்காதிருந்தாலென்ன?
ஆனால் அவள் தன் பெண்மைக்குரிய பண்பு, அவைகட்கும்
அருள்சுரக்கச் செய்தலால் சிலம்பவித்து மெல்லப்
போகச் செய்தது, செம்மலரின்
1. தொல், மரபியல் : 31. 2. நன்னூல் : 310
3. அகம் : 4. 4. சீவகசிந்தாமணி : 892.
|