பக்கம் எண் :

மூலமும் உரையும்417

1‘தாயிற் சிறந்தன்று நாண்தைய லார்க்கு’

என்றருளியதோடு ஆண்டவனை விளிக்கும்போதும்,

2‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே’

என்றருளியதும், ஒளவை மூதாட்டியார்,

3‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’

என்றருளியதும்,

விளம்பிநாகனார் என்னும் புலவர் பெருமான்,

4‘ஈன்றாளோ டென்ன கடவுளும் இல்’

என்று புகல்வதும், பிற ஆன்றோர் கருத்துக்களும் தாய்மையையே முதன்மையாகக் கொள்ளுதல் அறிக. இதனை நுனித்தறிந்த ஆசியர், ‘செவ்வண்ண வாயாள்’ என்று தாயரையே முதலிற் குறித்தா ரென உணர்க. ‘அவ்வண்ணம்’ என்பது, அத்தன்மையுள்ள கோலம். அக் கோலமென்ப தென்னை எனின்? ‘அற்ற துகிலும் அறாதொழுகு கண்ணீரும், உற்ற துயரும் உடையளாய்’ (307) இருக்கும் துன்பநிலை. அ என்னும் சுட்டு பண்டறி சுட்டாக வந்தது. ‘ஆற்றுவரோ?’ என்பதில் உள்ள ஓகாரம், அவலங் கலந்த எதிர்மறைப் பொருளுடையது. மெய்வண்ணம் - உடலின் அழகு. துன்பமிக்க காலத்தில் உடல் மெலிந்து தளர்தலும் நாவின் நீர் வறளலும் இயற்கையன்புடையார்க்கு நிகழும் செயலாதலின், ‘மெய்வண்ணம்...... நின்று’ என்றார். (154)

தமயந்தியின் தாய், தமயந்தியை நோக்கி வினவி அழுதல்

333. பனியிருளில் பாழ்மண்ட பத்திலே உன்னை
நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்
றென்நினைந்தாய் என்செய்தாய் என்னாப் புலம்பினாள்
பொன்னினைத்தாய் நோக்கிப் புலர்ந்து.

(இ - ள்.) தாய் - தமயந்தியின் தாயானவள், பொன்னினை நோக்கி - திருமகள் போன்ற தமயந்தியைப் பார்த்து, பனி இருளில் பாழ் மண்டபத்தில் - யாரும் அஞ்சி நடுங்குகின்ற இரவுப் பொழுதில் பாழ்பட்ட மண்டபத்தினிடத்தே, உன்னை நினையாது நீத்து அகன்ற போது - (உன் கணவன்) உன்னைப்பற்றிப் (பெண்

1. திருக்கோவையார் : 204. 2. திருவாசகம், பிடித்த : 3.
3. கொன்றைவேந்தன் : 1. 4. நான்மணிக்கடிகை : 56.
ந. - 27