|
சொரிந்தன ; அழுதாள் ; அவன்
காலடிகளில் வீழ்ந்து அலமரு வாளாயினாள். இதனை
ஆசிரியர், ‘தந்தையை முன்.........வீழ்ந்தாள்’
என்றார். பட்டதே என்னப் போய் வீழ்ந்தாள்
என்பதில் அவலச்சுவை நிறைந்திருத்தலை ஓர்க. படை
- வேற்படை என்றலுமாம். படை: படுத்தலையுடையது
என்னும் பொருளது. படுத்தலாவது : கொல்லல்.
கொல்லுதல் தொழிலையுடைமையால் பொதுவாக
ஆயுதங்கள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். 1‘படை
கொண்டார் நெஞ்சம்போல்’ என்றார் பிறரும்.
(153)
தமயந்தியின் தாயும் தந்தையும்
வருந்துதல்
332. செவ்வண்ண வாயாளும் தேர்வேந்தனும் மகளை
அவ்வண்ணம் கண்டக்கடல் ஆற்றுவரோ - மெய்வண்ணம்
ஓய்ந்துநா நீர்போய் உலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணீரின் நின்று.
(இ - ள்.) செவ்வண்ண வாயாளும் -
செந்நிறமுள்ள வாயையுடைய வீமன் மனையாளும், தேர்
வேந்தனும் - தேரூர்வோனாகிய வீமமன்னனும், மகளை
அவ்வண்ணம் கண்டக்கால்
ஆற்றுவரோ-தம்புதல்வியாகிய தமயந்தியை அந்தக்
கோலத்தில் பார்க்க நேரின் மனந் தாழுவரோ
(தாழமாட்டாரன்றே), மெய் வண்ணம் ஓய்ந்து -
உடலின் நிலை தளர்ந்து, நா நீர் போய்
உலர்கின்றது - நாவில் நீர்ப்பசையற்று
வறளுவதாயிற்று, ஒத்த தமர் - இவர்களை யொத்த
அன்புமிக்க சுற்றத்தோர்களும், கண் நீரின்
நின்று நீந்தினார் - கண்ணீர் வெள்ளத்தில்
அமிழ்ந்து அதில் மிதந்து கொண்டிருந்தனர். (அழுத
வண்ணமாக இருந்து ஏக்கங் கொண்டனர் என்றபடி.)
(க - து.) தமயந்தியைக் கண்ட அவள்
தாய் தந்தையர் இருவரும் வருத்தத்தால்
உடலோய்ந்து, நாவறண்டு நடுங்கினர் ; அவள்
சுற்றத்தாரும் கண்ணீர் பெருக அழுதவண்ணமாக
இருந்தார்கள் என்பதாம்.
(வி - ரை.) செவ்வண்ண வாயாள் :
ஈண்டுத் தமயந்தியின் பெற்றதாய். தேர் வேந்தன்
- தேரையுடைய வீமன் ; தமயந்தியின் தந்தை,
சேய்க்குத் தந்தையினும் தாயே முதன்மையானவள்.
இதனானே மணிமொழிப் பெருமான் மங்கை நல்லார்க்கு
நாணமே சிறந்ததெனக் குறிப்பிட்டபோது,
1. திருக்குறள் : 253.
|