பக்கம் எண் :

மூலமும் உரையும்415

யென்பது நிற்றல் என்னும் தொழிற் பெயர். அது, வீடுகளில் என்றும் நின்றவண்ணமாக இருக்கும் கதவை இணைக்கும் வழி மரச் சட்டத்தை உணர்த்துதலறிக. உழவு - உழத்தல், வருந்தல். வருந்திச் செய்யும் தொழில்களிலெல்லாம் மிக்க வருத்தந்தரும் வேளாண்மைத் தொழிலைக் குறித்தது. 1‘ஒரேர் உழவன் போல : என்றார் சங்கப்புலவர். எனவே, இவ்வாறு பல சொற்கள் செந்தமிழ் மொழிக்கண் பரவிக் கிடக்கின்றன. அவைகளின் காரணங்களைத் துருவி ஆய்தல் அறிஞர்கடன். எனவே, ஈண்டு மேலும் விரித்திலம். (152)

தமயந்தி, தந்தையைக் கண்டதும் அவன்
காலடியில் விழ்ந்தழுதல்

441. தந்தையைழன் காண்டலுமே தாமரைக்கண் நீர்சொரியச்
சிந்தை கலங்கித் திகைத்தலமந் - தெந்தாயான்
பட்டதே என்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்
விட்டநீர் மேலே விழ.

(இ - ள்.) (தமயந்தியானவள்) தந்தையை முன் காண்டலுமே - தன் தந்தையாகிய வீமமன்னனைக் கண்டவுடனே, தாமரைக் கண் நீர் சொரிய - தாமரை மலர் போன்ற கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட, சிந்தை கலங்கி திகைத்து அலமந்து - மனங்கலங்கி நெஞ்சறைபோகி மயங்கி, எந்தாய் - என் தந்தையே, யான் பட்டதே என்னா - அடியேன் பட்ட துன்பத்தைக் கண்டீரோ என்று கூறி, படை நெடும்கண் விட்டநீர் மேலேவிழ போய் வீழ்ந்தாள் - வாள் போன்ற கூரிய நீண்ட கண்களிலிருந்து தோன்றிய கண்ணீர்ப் பெருக்கானது அவன் மேல் விழும்படி சென்று (அவனடிகளில்) விழுந்து அழுவாளாயினாள்.

(க - து.) தன் தந்தையை நேரிற்கண்ட தமயந்தியானவள், ‘ஐயாவோ! நான் பட்டபாட்டைக் கண்டீர்களோ’ என்று கூறிக்கொண்டே சென்று அவன் காலடிகளில் வீழ்ந்தழுதாள் என்பதாம்.

(வி - ரை.) தாமரைக்கண் - தாமரை மலர்போன்ற கண் : உவமைத்தொகை. பண்பும் குளிர்மையும் கவர்ச்சியும் மலர்ச்சியும் பற்றிய உவமம். தமயந்திக்குத் தன்னைப் பெற்று வனர்த்துப் பெரும் பேறாக்கிய தாதையை - அன்புக்குரிய ஐயனைக் கண்டதும் மனங் கலங்கிற்று ; வருத்தம் பெருகிற்று ; கண்கள் நீரைச்

1. குறுந்தொகை : 131.