|
வாரும் பெருமூச்செறிவாரும் தொழுவாரும்
அவளைச் சூழ்வாருமாக
எங்குஞ் சூழ்ந்துகொண்டிருப்பதால் அக்குண்டினபுரம்
அன்பென்னும் நீர்ப்பெருக்கெடுத்துக் கடல்
பொங்கி வந்தது போன்று தோன்றிற்று என்பதாம்.
(வி - ரை.) அழுவார் விழுவார்
முதலியன எண்ணும்மைத் தொகைகள். அழுதல், அவள்
கண்கொள்ளாத் துன்பநிலை பொறுக்கலாற்றாத
நிலையினால்; விழுதல், துன்பந்
தாங்கவொண்ணாமையினால் ; அயிர்த்தல் -
ஐயங்கொள்ளல் : அஃதாவது அவள் அற்றதுகிலும்
அறாதொழுகு கண்ணீருமாகத் துன்பமே ஓருருக்கொண்டு
வந்ததுபோன்று இருந்த தன்மை கண்டு இவள் தமயந்தி
தானா? வேறொருத்தியா? என நன்குணராத நிலையில்.
உயிர்த்தல் - பெருமூச்சு விடுதல் : தமயந்தி நிலையை
எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் துன்பம் பெருகி
நெஞ்சத்தை அலைப்ப அதைத் தாங்கலாற்றாமல்
நீண்ட மூச்சுக்கொள்ளுதலினால்,
1‘ஊதுலைக் குருகின் உயிர்த்தனர்’
என்றார் பிறரும். தொழுதல், இறைவனை
வேண்டி, ‘இவட்கு நலஞ்செய்க’ என வழிபடுதல்.
சூழ்தல், அவளைவிட்டு நீங்கிவரவொண்ணாத
அன்புநிலையில் சுற்றிக்கொண்டிருத்தல். அழுவார்,
விழுவார் முதலியன இயல்பாக இறந்தகாலம்
எதிர்காலமாக வந்த கால வழுவமைதி. இவைகளை அழுதார்
தொழுதார் முதலிய இறந்தகாலமாகப் பொருள்
கொள்க. கள்ளங்கவடற்ற உள்ளன்பை’ ‘வழுவாத
காமநீர் ஓதக்கடல்’ என, உருவகமாக்கிக்
கூறினார். நாம் - அச்சம் ; அது நாமம் என அம்
விகுதிபெற்று வந்தது. இஃது இப்பொருட்டாதலை.
2‘பேம்நாம் உரும்என வரூஉம் கிளவி
ஆம்முறை மூன்றும் அச்சப் பொருள’
என்னும் தொல்காப்பிய நூற்பாவால்
அறிக. இது வீமமன்னன் வேற்படைக்கு அடையாக வந்து
அவன்றன் வெற்றிப் பெருமிதத்தைச் சுட்டிற்று.
நகர் - நகரம். நகர் - நகர்தல் என்னும் முதனிலைத்
தொழிற்பெயர் ஈண்டுத் தொழிலாகுபெயராக வந்தது.
நகர்ந்து செல்வது என்பது பொருள். நகர்தலாவது,
அங்கு வாழும் மக்களும் பல்வகை ஆடுமாடு முதலிய
உயிர்களும் போவதும் வருவதுமாக இருக்குஞ் செயல்.
இவ்வாறே பல சொற்கள் நம் தமிழ் மொழிக்கண்
இயைந்து அதன் உண்மையைக் காரணப் பொருட்டாக
விளக்கி நிற்றலை அறியலாம். நிலை
1. சிலப், 4 : 59. 2. தொல், சொல்,
உரியியல் : 69.
|