|
எனவும் ஆன்றோர் உணர்த்துவன
கொண்டறிக. இன்று, நாகரிகம் என்னும் சொல்,
நகரமக்கள் புதுப்புது முறைகளில் புனையும் ஆடை
அணிகளையுங் கோலம் புனைந்து அழகுபடுத்திக்
கொள்ளலையும் குறிப்பதறிக. இவை போன்றே
கோயில், முற்காலத்தில் அரசர்வாழ் மாளிகையைக்
குறித்ததெனக் கொள்க. கோயில், அந்தப்புரம்,
வாயில் என்பன, இடவாகு பெயராய், ஆங்காங்கு இருந்த,
நின்ற மக்களைக் குறிப்பதாயிற்று. அரசன்
பேரவையில் இருப்போர் ஆண்மக்களேயாதலால்
கோயிலும் என்னும் சொற்கு, ஒன்றொழி பொதுச்
சொல்லாகக் கொண்டு ‘ஆடவர்’ எனப் பொருள்
கூறினாம். ‘அந்தப்புரம்’ என்னும் சொல்லும்
அவ்வாறே பெண்டிரைக் குறிப்பதாதலால் ‘பெண்கள்’
எனக் கூறினாம்...வாயில் என்பதற்கு அரசன் புதல்வி
ஒரு இடுக்கணுக்காளாகி வரும்போது மக்கள் வியப்பும்
வருத்த முங்கொண்டு கூடிவந்து நிற்பாராதலால். ‘ஊர்மக்கள்’
என்றாம். கான் ஆள - காட்டில் இருக்க என்னும்
பொருட்டு. செயவெனெச்சம் காரியப் பொருள்
தருதலால் இறந்தகாலங் காட்டிற்று. உம்மைகள்
நான்கில் முன்னது மூன்றும் எண்ணுப் பொருளிலும்
பின்னது ஒன்றும் உயர்வு சிறப்புப் பொருளிலும்
வந்தன. (151)
இதுவும் அது
330. அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார்
தொழுவார் தமரெங்கும் சூழ்வார் - வழுவாத
காமநீர் ஓதக் கடல்கிளர்ந்தால் ஒத்ததே
நாமவேல் வீமன் நகர்.
(இ - ள்.) நாமவேல் வீமன் நகர் -
(பகைவர்க்கு) அச்சந்தரும் வேற்படையைத் தாங்கிய
வீமமன்னனுடைய குண்டினபுர நகரானது, தமர் -
(தமயந்திக்கு) உற்றார் உறவினர், அழுவார்
விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார் தொழுவார்
எங்கும் சூழ்வார் - (தமயந்தியின் கண்கொள்ளா
அவல நிலையைக் கண்டு) அழுபவர்களும்
(தமயந்தியின்மேல்) விழுபவர்களும் பல்வகையான
ஐயங்கொள்பவர்களும் பெருமூச்சு விடுகின்றவர்களும்
தொழுகின்றவர்களுமாகி நாற்பக்கமும் வந்து
சுற்றிக்கொண்டார்கள் (இதனால்), வழுவாத காமநீர்
ஓத கடல் கிளர்ந்தால் ஒத்தது - களங்கமற்ற
அன்பென்னும் நீர்நிறைந்த கடல்
பொங்கியெழுந்ததை ஒத்திருந்தது.
(க - து.) தமயந்திக்கு உறவினர்
பலர், தமயந்தியின் துன்பநிலைக்கு வருந்தி
அழுவாரும் விழுவாரும் ஐயமடை
|