பக்கம் எண் :

412நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

கடவுளர் கோட்டங்களையே குறிப்பதறிக. இவ்வாறே பல சொற்கள் ஒரு காலத்தில் ஒரு பொருளைக் குறித்துப் பின் அதற்குமாறான (முரணான) பொருள் தருதலும் அறியலாம். நாற்றம் என்னும் சொல் முற்காலத்தில் நறுமணத்தையே குறித்தது.

1‘மாமலர் நாற்றம்போல் மணிமேகலைக்
கேது நிகழ்ச்சி’

எனவும்,

2‘நாற்றங் கேட்பினும் தின்ன நயப்பதோர்
கூற்றுண்டோ’

எனவும்,

3‘பொன்மலர் நாற்றம் உடைத்து’

எனவும்,

4‘முகைமொக்குள்உள்ளது நாற்றம்போல்’

எனவும் ஆன்றோர் கூறும் வழக்குக்களான் உணர்க. இன்று நாற்றம் என்றால், மூக்கால் முகரலாகாக் கெட்ட கமழ்ச்சியையே குறிப்பதறிக. ஆண்டி என்னும் சொற், ஆள்+இ=ஆளி, எனப் பின் ளகரம் டகரமாக மாறி, இரட்டித்து மெல்லினமாகி ‘ஆண்டி’ என்றாயிற்று. இதற்கு ஆள்பவன் என்று பொருள். பொதினிமலை (பழனிமலை) யில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளைப் ‘பழனியாண்டி’ என வழங்குவர். அதற்குப் பழனி நகரை - மலையை ஆள்பவன் என்பது பொருளாக ஆளுகின்ற மன்னன் போன்று முருகனைக் குறித்து வழங்கியது. இன்று, ஆண்டியென்னுஞ் சொல் இரந்து உயிர்வாழும் ஏழைமக்களைக் குறிக்கின்றது. நாகரிகம் என்னுஞ்சொல், பழங்காலத்தில் கண்ணோட்ட (தாட்சண்ணிய)த்தைக் குறித்தது.

5‘நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்’

எனவும்,

6‘நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்’

எனவும்,

7‘நாக்கரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை’

1. மணிமேகலை, 3:3-4. 2. கம்பரா, தாடகைவதை: 64.
3. நீதிநெறி விளக்கம்: 4. 4, 5. திருக்குறள்: 1274; 580.
6. நற்றிணை : 355. 7. கம்பரா, சூர்ப்ப : 125.