பக்கம் எண் :

மூலமும் உரையும்411

யையும்............போக்கினான்’ என்றார். ‘கண்டாயினும்’ என்பதிலுள்ள உம்மை சிறப்புப் பொருளில் வந்தது. ஆற : செயவெனெச்சம். தனி - தனிமை, ஒன்றி : தன்னோடு தொடர்புடையார் யாருமில்லாது இருத்தல். விதியில் என்பதிலுள்ள இல் ஏழனுருபு வேற்றுமை மயக்கம். விதியால் என மூன்றனுருபு இவ்வாறு மயங்கிவந்தது. இங்கே அதனைக் கருவிப் பொருளாகக் கொள்ளுக, அவள் வருதற்குக் கருவி (காரணம்) விதியே ஆகலான் என்க. போந்தாள் - வந்தாள். இறந்தகால வினையாலணையும் பெயர். (150)

தமயந்தி, குண்டினபுரத்துக்குப் போனபோது
நகரம் முழுதும் மயங்குதல்

329. கோயிலும் அந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியவே - தீயகொடுங்
கானாள மக்களையும் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது.

(இ - ள்.) தீய கொடும் கான் ஆள - தீமைமிக்க கொடிய காட்டில் திரிந்து வருந்த, மக்களையும் கைவிட்டு - (தன் ஆருயிர் போன்ற) மைந்தர்களையும் பற்றற விட்டுவிட்டு, காதலன் பின் போனாள் புகுந்தபொழுது - தன் கணவனுடன் சென்ற தமயந்தியானவள் (தனியே வந்து) சேர்ந்த காலத்தில், கோயிலும் அந்தப்புரமும்-(வீமமன்னன்) அரண்மனையிலுள்ள ஆடவர்களும் அந்தப்புரத்திலுள்ள பெண்களும், கொடிநுடங்கும் வாயிலும் நின்று மயங்கியவே - கொடிகள் பறந்து அசைகின்ற வாயிலில் நின்ற ஊர் மக்களும் செயலற்று நின்று (தமயந்தியின் துன்பத்திற்காகத்) திகைப்படைந்தார்கள்.

(க - து.) மக்களையும் பிரிந்து தன் கணவன் நளனுடன் கொடிய காட்டிற்குச் சென்ற தமயந்தியானவள் தன்னந்தனியாக குண்டினபுரத்துக்கு வந்தகாலத்தில் ஊரிலுள்ள மக்கள் எல்லோரும் வருத்தங்கொண்டு செயலற்று நின்றார்கள் என்பதாம்.

(வி - ரை.) கோ+இல்-கோயில் - கோ - அரசன், இல் - வீடு - அரசன் வீடு. அது கோட்டைகளையுடையதாய்ப் பாதுகாப்பு மிக்கதாய் இருக்குமாகலான், அரண்மனையெனப்பட்டது. பிற்காலத்தில் இவ்வழக்காறொழிந்து, கடவுளர் உருவமைத்து வழிபடும் இல்லத்தைக் குறிப்பதாயிற்று, இன்று கோயில் என்பது