1‘அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதரைப்பான் பண்பு’
2‘தொகச்சொல்லித் தூவாத நீக்கி
நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது’
என, அருளுமாற்றால் அறிக. தண்மை -
குளிர்ச்சி. தெரியல் - மாலை. தேர் வேந்தன்
என்பதற்கு முதனிலைத்தொழிற் பெயராகக்கொண்டு
தேர்ச்சி (தெளிதல் ; ஆராய்தலை) யுடைய அரசன்
என்று பொருள் கூறலுமாம். (85)
புட்கரன், நளனிடம் வருதல்
419. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வல்நெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டான் எதிர்.
(இ - ள்.) மாயநெடும் சூதில்
வஞ்சித்த வல்நெஞ்சன்-வஞ்ச மிக்க
சூதாட்டத்தில் (நளனை ஏமாற்றி அவனுடைய நாடு நகர்
முதலியவற்றைக்) கைப்பற்றி வஞ்சஞ் செய்த
கல்நெஞ்சையுடையனாகிய புட்கரன், தூயநறுமலர் பூ
சோலைவாய் - தூய்மையான மணம் பொருந்திய
பூக்களையுடைய பொலிவுற்ற சோலையினிடத்தே, ஆய
பெரும்தானை சூழ - சிறந்த பெரிய படைகள் சூழ்ந்து
நிற்க, பெடை நடையாளோடும் இருந்தானை - அன்னப்
பேடுபோன்ற மென்னடையுடைய தமயந்தியோடும்
தங்கியிருந்த நளமன்னனை, எதிர்கண்டான் - நேரிற்
போய்ப் பார்த்தான்.
(க - து.) நல்ல சோலையிடத்தே
சேனைகள் சூழ்ந்து நிற்கத் தமயந்தியோடும்
தங்கியிருந்த நளமன்னனைப் புட்கரன் போய்
நேரிற் கண்டான் என்பதாம்.
(வி - ரை.) மாயநெடும், நெடுமாயம் என
மாற்றி மிக்க வஞ்சம் என்று பொருள்
கொள்ளலுமாம். நெடுமாயமாவது, கலியால் தான் வென்ற
சூழ்ச்சிமிக்க வஞ்சம். வல் - வலிமை வலிமை
யெல்லாவற்றினும் மிக்க வலிமையும் நெகிழாத
தன்மையும் உடையதாகலான் வல் என்ற சொற்குக் கல்
என்று பொருள் கூறப்பட்டது: ஆகுபெயர். தூய்மை -
பரிசுத்தம். மலர்மாசற்றது; மென்மையுடையது ;
கண்டாரால் விரும்பப்படும் தன்மை
1, 2. திருக்குறள் : 681, 685.
|