பக்கம் எண் :

மூலமும் உரையும்535

கின்பமும் பல்க இருக்குமாதலால், அச்சிறப்புத் தோன்றவே ‘பூவிந்தை’ என்றார். விந்தை - வியப்பு. பல்வகை நிறமும் குணமும் மணமும் பெற்ற தன்மை. வாழ்தல் - நிலைத்திருத்தல். பொழில் - சோலை. ஒரு - ஒப்பற்ற, ஒன்று என்னும் எண்ணுப் பொருளினும் வந்தது. (84)

நளன், புட்கரனுக்குத் தூதனுப்பி
அவனை அழைத்துவரக் கூறுதல்

418. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணையம் உளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீர் என்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்தெரியல் தேர்வேந்தன் தான்.

(இ - ள்) தண்தெரியல் தேர்வேந்தன் - குளிர்ச்சி பொருந்திய மலர் மாலையணிந்த தேரினையுடைய நளமன்னன், கொற்றவனுக்கு என் வரவு சொல்லி - வெற்றிவேந்தனான புட்கரனுக்கு என்வருகையை அறிவித்து, மறு சூதுக்கு உற்ற பணையம் உளது என்று - என்னிடத்தில் இரண்டாம் சூதுக்குப் பந்தயப்பொருள் இருக்கின்றதென்று கூறி, அவனைகொண்டு அணைவீர் என்று குல தூதரைவிடுத்தான் - அவனை அழைத்துக்கொண்டு வருவீர்களாகவென்று கூறிச் சிறந்த தூதர்களை அனுப்பினான்.

(க - து.) நளன் தூதர்களை அழைத்து, ‘தூதர்களே! நீவிர் புட்கர மன்னனிடம் போய் என் வருகையைக் கூறி என்பால் மறு சூதாடுதற்குரிய பந்தயப்பொருள் இருக்கின்றதென்று அறிவித்து அவனை அழைத்துகாண்டு வாருங்கள்’ என்று சொல்லித் தூதர்களை அனுப்பினான் என்பதாம்.

(வி - ரை.) மற்று - அசைநிலை. அவனுக்கு : பண்டறி சுட்டு உருபேற்றது. பணையம் - பந்தயப்பொருள். உளது - உள்ளது. கொற்றவன் - வெற்றியுடையவன். ஈண்டு அரசனைக் குறித்தது. குலத்தூதர் - தூதுபோதற்கேற்ற தகுதி வாய்ந்தவர். தூது செல்வார்க்குத் தகுதியாவது, அன்பு, நற்குடிப்பிறப்பு, அரசர்க்கு மனங்கொள்ளும்படி சொல்லும் சொல்வாய்ப்பு முதலியனவாகும். இதனைத் திருவள்ளுவரும் அமைச்சரின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக ‘சொலல் வல்லன் சோர்விலன்’ என்று கூறியதோடமையாது தூதனுக்கும்,