(க - து.) ஆண்குயில் பெண்குயிலுடன்
இனிமையுறப் பேசுதலை நளன் கேட்டு அறிவுநிலை
கலங்கினான் என்பதாம்.
(வி - ரை.) குயில் சேவல்,
சேவற்குயிலென வந்தது: சொன்னிலை மாறிய
இலக்கணப்போலி: வாயில், நகர்ப்புறம் போலக்
கொள்க. காதலால் குயிலின் ஆணும் பெண்ணும் கலந்து
பேசுகின்ற குரலைக்கேட்டதும் நளனுக்கு
காதல்வேட்கை மிக்கெழுந்தது. காதலர்களுக்கு -
அதிலும் பிரிந்து தன்னந்தனியராய் வாழ்வார்க்கு
மிக்க வேட்கையெழுவது இயற்கை. அம்முறையில்
கைக்கிளைக் காமமீதூர்ந்த நளனுக்கு அவைகள் பேசிய
குரலைக்கேட்டு நெருப்பிலிடு வெண்ணெயென
நெஞ்சுருகினான். இவ்வாறே காதலியைப்பிரிந்து
கானத்துறைந்த அயோத்தியேந்தல் இராமபிரான்
கானில் தத்தம் காதலியோடு கலந்து திரிகின்ற
ஆணும் பெண்ணுமாகிய யானை, மான், மயில், குயில்
முதலியனவற்றைக் காண்டொறும் காண்டோறும் காதல்
மனத்தைக் கவற்ற வருந்தி நின்றானென்று
சொல்லிப்போந்த கம்பர் கருத்துக்களும் இதனோடு
ஒப்பவைத்து மகிழற்பாலன.
1‘மயிலும் பெடையும் உடன்திரிய மானும்
கலையும் மருவிவரப்
பயிலும் பிடியும் கடகரியும் வருவ திரிவ
பார்க்கின்றான்
குயிலும் கரும்பும் செழுந்தேனும் குழலும்
யாழும் கொழும்பாகும்
அயிலும் அமுதும் சுவைநீத்த மொழியைப்
பிரிந்தால் அழியானோ.
அழிதல் - மனநிலை வேறுபடல். பூவின்
இடையன்னம், இளவன்னம், நடையன்னம் என்பன, சொற்பின்
வருநிலையணி. அன்னங் கூறக்கேட்ட தமயந்தியையும்
‘நடை அன்னம்’ என நயந்தோன்றக் கூறினார்,
இயற்கைக்கவி ஆகலான். (41)
நளன், மயில் ஆடுதலைக்கண்டு மனம்
மறுகுதல்
49. அன்னம் உரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தன் தோகை விரித்தாட - முன்னதனைக்
கண்டாற்றா துள்ளம் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கி தன்றோ குணம்.
(இ - ள்.) அன்னம் உரைத்த குயிலுக்கு
அலசுவான் - அன்னம் சொல்லிய குயிற் குரல்போன்ற
குரலுடைய தமயந்தி
1. கம்பராமா, அயோமுகிப் : 29.
|