பக்கம் எண் :

மூலமும் உரையும்53

உணர்த்துகின்றன. இது, கைக்களையின்பாற்படும். 1‘கைக்கிளையாவது ஒருமருங்குபற்றிய கேண்மை’ என்பர், நச்சினார்க்கினியர். அஃதாவது, காதல்கொண்ட ஆடவரோ பெண்டிரோ தாம் காதலித்தாரை நினைந்து வருந்தும் நிலைமை. ‘இதனைக் 2‘கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்’ என்றார், அகப்பொருள்விளக்க ஆசிரியரான நம்பியார். இதுமுதல் ஒருதலைக்காமம்பற்றி, அஃதாவது நளன் தமயந்தியிடத்துக்கொண்ட காதல் மிகுதி பற்றி ஐந்து பாடல்களால் குறிப்பிடுகின்றார். மும்மதம் கன்னம் (காது) கபோலம் (தலை : மத்தகம்) பீசம் (ஆண்குறி) இவைகளிடத்துத் தோன்றி ஒழுகும் ஊற்றுநீர். இது ஆண்யானைகளுக்கு உண்டாவதியல்பு. இம்மதங்களினால் யானை தன் அறிவு திரிந்து செருக்குற்று கண்டவற்றையெல்லாம் அழிக்கும் நீர்மையுடைய தாகலான், ‘ மும்மதநின்று ஆளும் கொல்யானை ’ என்றார். இத்தகைய ஆற்றல்மிக்க யானையைுடையான், தன் ஆற்றல் அழிந்து காதல் வயத்தனாய்க் கலக்கமுற்றான் என்பது குறிப்பு. அரசு: அரசுக்குரிய தன்மையுடையவனைக் குறித்தலால் பண்பு ஆகுபெயர். கொல் ஐயமும் அவலமும்கொண்ட இடைச்சொல். இது நான்கிடத்தும் வந்து அரசன் வருந்தும் தன்மையை விளக்கிநின்றது. 3‘குளித்து மணற்கொண்ட கல்லா இளமை, அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ’ என்னும் புறநானூற்றில் கொல் அவலப் பொருள்தருதலை ஓர்க. (40)

நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்

48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம் செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

(இ - ள்.) பூவின் இடை அன்னம் - தாமரைமலரில் வாழ்கின்றதும், செங்கால் இள அன்னம் - சிவந்தகால்களும் இளைமையும் உடையதான அன்னப்பறவையால், சொன்ன - சொல்லப்பட்ட, நடை அன்னம் தன்பால் நயந்து - அன்னம்போன்ற நடையழகுள்ள தமயந்தியின்மீது காதல்கொண்டு, சேவல் குயில்-ஆண்குயிலானது, பெடைக்கு பேசும் சிறுகுரல் கேட்டு - பெட்டைக்குயிலுடன் பேசுகின்ற இன்குரலைக் காதாற்கேட்டு, ஆவி உருகி அழிந்திட்டான் - உயிர் தளர்வுற்று அறிவு வேறுபட்டான்.

1. தொல். அகத்தினை : 1. 2. நம்பி அகப்: 2.
3. புறம்: 243.