பக்கம் எண் :

திருநாளைப்போவார்216நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கருதுஞ்சுருதிக் கெட்டாதசிவ
     காமசுந்தரி வாசலிலே
விருதுபேசியே சிறுகுழந்தைகள்
     வேதம்படிக்குது பாருங்கடி. (5)

நாலுபுறத்திலுங் கோபுரமாமதி
     னடுவிலெங்கினு மாளிகையாம்
காலோராயிரங் கொண்டொருமண்டபம்
     கட்டியிருக்குது பாருங்கடி. (6)

தூயமறைமுத லாராய்ந்துஇங்கே
     துலங்கியமூவா யிரமுனிவர்
ஞாயம்பொருந்திய தேவசபைவந்து
     நாடிக்கும்மி யடியுங்கடி. (7)

சாந்துப்பொட்டு தளதளென்னநல்ல
    சந்தனவாடை குமுகுமென
கூந்தலழகிக்காரி யெல்லாங்காலைக்
    குவித்துக்கும்மி யடியுங்கடி. (8)

அஸ்தகடகம் பளபளெனசொல்லும்
    அரைநூன்மாலை தளதளென
விஸ்தாரமாக நின்றுகொண்டுகையை
    வீசிக்கும்மி யடியுங்கடி. (9)

கைதனில்விபூதிப் பையுங்கொண்டுஅவர்
    கண்டத்தில்ருத்திராட்ச மாலைபூண்டு
வைதீகபூசைகள் செய்கின்றதீக்ஷதர்
    வாழக்கும்மி யடியுங்கடி. (10)

கோவிலுக்குநாலு பேர்களுண்டாம்அவர்
    குறித்தமுறையாய்ப் பூசைசெய்ய