பக்கம் எண் :

திருநாளைப்போவார்217நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பாவித்தபின்பவர் வேறொருவர்வசப்
    படுத்துவாரென்றே கும்மியடி. (11)

ஆண்டுக்குள்ளாறபி ஷேகமுண்டாம்பின்னும்
    அதிலேரண்டு திருநாளாம்
வேண்டிவந்தவர் கலிதீருமென்று
    விரைந்துகும்மி யடியுங்கடி. (12)

பூமிபுகழ்ந்திடுந் தில்லைப்பதி அது
    பூலோகக்கயி லாசமென்று
தாமரைப்பூவினில் வாழ்கின்றலட்சுமி
    தாயார்சந்நிதி பாருங்கடி. (13)

மூலத்தானத்தைக் கண்டாயேநல்ல
    முத்தியிதுவென்று கொண்டாயே
காலெடுத்தாடிய நிர்த்தசபேசனைக்
    கண்டுதரிசிப்போம் வாருங்கடி. (14)

தில்லைமாகாளியோ டாடிவரஅவள்
    சித்தங்கலங்கித் தலைகுனிந்தாள்
வெல்லுவதெப்படி யென்றொருகாலை
    விண்ணிலெடுத்தார் பாருங்கடி. (15)

நெற்றியில்வேர்வை முத்துதிர்ந்துமெத்த
    நேத்தியதாய்ப்பரந் தோடிவர
பத்தியுடன்பொன் னம்பலவாணனைப்
    பணிந்துகும்மி யடியுங்கடி. (16)

தித்தியென்றீச னடனம்புரியமெய்த்
    தேவர்கள்பூமழை தான்சொரிய