மத்தளங்கொட்டியே
கோபாலகிருஷ்ணனை
வாழ்த்திக்கும்மி யடியுங்கடி.
(17)
சிதம்பரமென்று
சொல்லாமலேயிதைச்
சித்திரக்கூட மென்றுசொல்லி
நிதங்கொண்டாடு மையங்கார்கள்வந்து
நின்றிருக்கிறார் பாருங்கடி.
(18)
காணிக்கைகொண்டு
வாருங்கடியிந்தக்
கனகசபையைப் பாருங்கடி
மாணிக்கவாசகர் புகுந்தவாசலை
மதித்துக்கும்மி யடியுங்கடி. (19)
அன்னமுடன்பால் தேங்கனியும்செய்யும்
அபிஷேகமுண் டென்னாளும்
பொன்னம்பலந்தனில் சந்திரமௌலியைப்
போற்றிக்கும்மி யடியுங்கடி. (20)
முத்தியளித்திடுஞ்
சந்நிதிக்குச்சொல்லும்
மேளமுந்தாளமு மேதுக்கடி
சத்தம்பெருகிய கண்டாமணியோசை
சந்நிதிக்கேர்வையாம்
பாருங்கடி. (21)
புட்டுவடையுந் தேன்குழலும்மணப்
புத்துருக்குநெய்ச் சம்பாவும்
சட்டப்படிதவ றாமலையன்
சந்நிதிக்கேர்வையாம்
பாருங்கடி. (22)
சுற்றிவந்துச்சியைப்
பாருங்கடிசெகச்
சோதிமயக்கம்ப மொன்பதடி
தத்துவங்கள்தொண்ணூற் றாறுங்கூடிச்
சமைந்தசபையைப் பாருங்கடி. (23)
|