பாவிகள்கண்ணுக்குச்
செப்போடுவுற்றுப்
பார்த்தாற்பத்தரை மாற்றுத்தங்கம்
கோவைபாடிய மாணிக்கவாசகர்
கோவிலழகையும் பாருங்கடி. (24)
அஞ்செழுத்தாலே
மதிலுண்டாம்பர
மானந்தக்கும்பமு மங்குண்டாம்
அஞ்செழுத்துப்படிக் கப்பாலேபிரம
மானந்தத்தாண்டவம் பாருங்கடி.
(25)
கோடியுகந்தவஞ் செய்தாலுமிந்தக்
கோவிலைப்பார்க்க முடியாது
ஆடியபாதத்தைக் கண்டாருக்கிணை
யாரென்றுசொல்லுவோம்
பாருங்கடி. (26)
நெற்றியிலேதிரு நீறணிந்து
என்றும்
நிஷ்களமாகிய சிற்சபையில்
தித்திக்கவேசிவ நாமத்தைப்பூசிக்குந்
தீட்சதர்கூட்டத்தைப்
பாருங்கடி. (27)
வெட்டவெளியிற்
றிரைதிறந்துயார்க்கும்
வேதியர்தீபமுங் காட்டிவர
சட்டமுள்ளசிவ சிதம்பரமென்று
சாய்ந்துகும்மி யடியுங்கடி. (28)
தில்லைவெளிதனைக்
கண்டேண்டியென்றன்
தேகம்பரவசங் கொண்டேண்டி
அல்லலறவாசல் நின்றேண்டிமிக்க
ஆநந்தத்தாண்டவம் பாருங்கடி.
(29)
|