பக்கம் எண் :

திருநாளைப்போவார்220நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ஆகாயலிங்கத்தைக் கண்டேண்டியிங்கே
   யாருமறியாமல் நின்றேண்டி
ஏகாந்தமாக விருந்தேண்டிமன
   தேக்கந்தொலைந்தது பாருங்கடி. (30)

சித்தஞ்சிதம்பர மாச்சுதடிமுன்னே
   செய்தவினையெல்லாம் போச்சுதடி
சுத்தப்பிர்ம்மமய மாச்சுதடியதைச்
   சொல்லத்தெரியுமோ பாருங்கடி. (31)

சாதிபேதங்க ளற்றேண்டியிந்த
   சாஸ்திரமனைத்தையும் விட்டேண்டி
போதமயக்கந் தொலைத்தேண்டியன்பு
   பொருந்தக்கும்மி யடியுங்கடி. (32)

நாடுந்தைப்பூரண பூசத்திலேதில்லை
   நாயகனற்குரு வாரத்திலே
ஆடியநாடகம் பாம்பும்புலிதனக்
   காமென்றுகும்மி யடியுங்கடி. (33)

சஞ்சிதக்கர்மத்தை விட்டேண்டிபவ
   சாகரத்தையொழித் திட்டேண்டி
குஞ்சிதபாதத்தைத் தொண்டேண்டிமனங்
   கூர்ந்துகும்மி யடியுங்கடி. (34)

சொல்லும்பொருளையு மற்றாயோமுன்னே
   துன்பமனைத்து மொழித்தாயோ
அல்லும்பகலையு மற்றாயோதில்லை
   யாநந்தத்தாண்டவம் பாருங்கடி. (35)