பக்கம் எண் :

திருநாளைப்போவார்221நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விதியினெழுத்தைக் கிழித்தாச்சுமுன்னே
    விட்டகுறைவந்து தொட்டாச்சு
மதியமிர்தமு முண்டாச்சுதென்று
    வாழ்த்திக்கும்மி யடியுங்கடி. (36)

கோவிலுக்குள்ளே யனேகமுண்டுஅந்தக்
   குறிப்பறிந்ததைச் சொல்லுவீரே
தேவரகசியம் பள்ளியறைவந்து
   தெளிந்துக்கும்மி யடியுங்கடி. (37)

சண்டேஸ்வரர்தமைப் பாருங்கடியந்தச்
   சந்நிதிக்கேகையைக் கொட்டுங்கடி
மண்டலம்புகழு மழகர்வாசலில்
   வாழிபாடுவோம் வாருங்கடி. (38)

வீட்டுக்கவலைகள் விட்டொழியார்மெத்த
   வீம்புகள்பேசியே வீணிலைவார்
பாட்டைப்படித்தாலுஞ் சிதம்பரம்வந்து
   பலனதல்லவோ பாருங்கடி. (39)

புத்திரபாக்கிய மெத்தவுண்டாம்பசும்
   பொன்னுமணிப்பூஷ ணமுமுண்டாம்
பத்தியுடன்கோ பாலகிருஷ்ணன்தினம்
   பணியக்கும்மி யடியுங்கடி. (40)

சிதம்பரக்கும்மி முற்றிற்று.

________