சும்மா விருக்கும் சுகங்கண்ட மௌனியொடு
சும்மாவி ருக்குஞ்ஜோதி
நீதிபல பேசிமத வாதமிடு மடையரது
நெஞ்சைப் பிளக்குஞ்ஜோதி
நின்றநிலை நின்றட்ட திக்கெலா
மிரவு பகல்
நிர்த்தமிடு நெடியஜோதி
மாதுமலை மங்கையொடு ஆதிசபை மீதில்வளர்
மணிமந்த்ர தீபஜோதி
மதிஜோதி ரவிஜோதி சிவஜோதி தவஜோதி
மங்கைசிவ காமியுறவே. (4)
மாசிலா வாகம புராணமறை
யாஞ்ஜோதி
மகவா யுதித்தஜோதி
மன்னனது கிரிகையைத் தள்ளவென்
றஜோதி மலைமகள் தழுவுஜோதி
தேசமிட மாம்பொருள் வற்றவற் றாஜோதி
தென்னவனை வீழ்த்தஜோதி
தேவரிந் திரன்முனிவர் அமரர்கின் னரருரகர்
தேடக்க ளித்தஜோதி
ஆசைவன் பாசமா மாயாசரக் கருணை
யமுதன்பர்க் குதவுஜோதி
அன்பாம் பணிபூண்டு சிவசிவ வெனத்தேம்பு
மவர்க்கே நடித்தஜோதி
மாசின்மலர் சோலைகுளிர்
தீம்புனற் றில்லைமந்
திரச்சபையி லிலங்கும்
மதிஜோதி ரவிஜோதி சிவஜோதி தவஜோதி
மந்திரத்து சுயஞ்ஜோதியே. (5)
திருச்சிற்றம்பலம்.
|