பக்கம் எண் :

ஜோதிமயம்231நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விரிவான யெண்பத்து நான்குலட் சஞ்ஜீவ
    பேதத் தமர்ந்தஜோதி
வினைப்பய னறிந்தந்தக் கருவிடைப் போக்கியே
    வேடிக்கை பார்க்கும்ஜோதி
பருவமதி யிரவியொடு பங்கயனு மிந்த்ராதி
    பார்க்கவே கனகசபையில்
பண்டுநட னஜோதி விண்டுபர வுஞ்ஜோதி
    தில்லைச் சுயஞ்ஜோதியே. (2)

பிஞ்சுமதி நதியைமுடி மேற்பூண்ட ஜோதியாம்
    பணிமேலணிந்தஜோதி
பேசரிய மறையடியு நடுமுடியு மாஞ்ஜோதி
    பெண்கொடி மணந்தஜோதி
அஞ்செழுத் தாய்பஞ்ச பூதமா யென்னுடற்
    காதார மானஜோதி
அகிலபுவ னங்களும் திக்குத் திகந்தமும்
    அங்கிங்கெ னாதஜோதி
தஞ்சமெனு மடியரது நெஞ்சைத் திருத்தியே
    தன்னருள் காட்டுஜோதி
தந்தைதாய் குருதெய்வம் தாரமாய் மகவுமாய்
    தானுமா யோங்குஜோதி
கஞ்சனொடு விஞ்சையனு மஞ்சவே கொஞ்சலொடு
    கனகசபை மீதுநாளும்
கதித்த பெருஞ்ஜோதி துதிக்கப் பெருஞ்ஜோதி
    கனகசபை சிவஜோதியே. (3)

ஜாதிமத பேதமாம் கழக்கற்ற முதியோர்
    சமுகத் திலங்குஜோதி
சதுர்மறையாம் வேதமொடு தொண்ணூற்றாறுதத்
    துவமெலாம் நின்றஜோதி
ஜோதிமலை மீதிற் சுயஞ்ஜோதி யாய்நின்று
    சோதித் தழைக்கும்ஜோதி