பக்கம் எண் :

ஜோதிமயம்230நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

 உ

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

ஜோதிமயம்.

-------

இந்திராதிமுதன்முனிவர் கொண்டாடு ஜோதி
     யெண்டிசை காணவோங்குஜோதி
யிமையபர் வதவல்லி கண்கண்டஜோதி
     யென்இருவினை யறுக்கும்ஜோதி
சாலோக சாமீப சாரூப மளவிடா சாயுச்ய
    ஜோதியிதுவே
சிந்தையில் நிமைப்போது ஐம்பூத சாட்சியாய்
    தெரிசனஞ் செய்தபேர்க்கு
செய்வினை யேவல்கொடு சூன்யமுதல்பிணியெலாம்
    சென்மாந்தி ரத்துமணுகா
நந்தியொடு புலியரவ மூவாயி ரம்பேரும்
    நான்முகனும் விண்டுநடுவே
நற்சிற்சோதி நவஜோதி சிவஜோதி
    யென்னம்மைசிவ காமியுறவெ. (1)

பரிதிமதி திருவலம் செய்து தொழுஞ்ஜோதி
    பங்கயன் வணங்குஜோதி
பாரளந் தோன்தேடி காணாத ஜோதியது
    பார்ப்பதி கண்டஜோதி
சரியை கிரியாயோக ஞானமோ னத்தவர்கள்
   சதாநிஷ்டை செய்யும்ஜோதி
ஜனகாதி முனிவர்மன மகலாத ஜோதியது
   சச்சிதா நந்தஜோதி