பக்கம் எண் :

பஞ்சாட்சர மகிமை229நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கல்லாய்ப் பிறந்தாலும் நல்லவர்கள் மிதிகொண்டு காட்சிக் குறுத்து மன்றோ
கழுதையுரு வந்தாலும் ஆவெனக்கத்தினால் கைகண்டசகுனமென்பார்
எல்லாமி லாமலே யிப்பிறவி தந்தெனை யேங்கவிட்டகலநின்றாய்
எத்தனை அன்னையின மெத்தனை தந்தையின மெத்தனை பிறவிவருமோ
அல்லலெனு மாசறுத் தாட்கொளுந் தெய்வமே அப்பனே தில்லைநகர்வாழ்
அதிபதீ ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பிலுறை நடனபதியே. (3)

கல்லாத மூடரைக் கயவரைக் காமுகரைக் கன்னெஞ்ச வஞ்சரிவரை
கற்றுமறி வில்லாத மோழையைக் கோழையைக் காக்கவைத் துண்டபேதை
பொல்லாத மூர்க்கரை மிருகங்கள் போன்றவரை பொய்க்கு அஞ்சாத பேரை 
பூமியிற்பிறருக்குஇடுக்குமுயல்வோர்களைப்பிணமொத்தபேரைப்பலரை
நல்லா ரெனக்கவிகள் சொல்லியலை யாமல்நா னாளாவ தென்றுசிவமே
நானன்றி நீயேது நீயன்றி நானேது நானாயுரைத்ததேது
அல்லிலும் பகலிலும் நீயிலா தசைவேது அருள்மடை திறந்ததில்லை
அதிபதீ ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பிலுறை நடனபதியே. (4)

ஜெகமெட்டு திசைகளுங் கிரிகள்பல தெய்வமும் செம்பொன்மணி மாடமேடை
சேயன்னை தந்தையும் நானென்ற ஆணவஞ் செல்வமும் வல்லசித்தும்
மகிடேறு மெமனுக்கு முன்வந்து உதவுமோ முத்திக்கு வித்துமுளதோ
மூவாசை விட்டுகனி சருகாதி தின்றாலும் முன்செய்த வினையகலுமோ
யிகமுனிய சுகபோகம் ஈசநீ காணாது
இருளேது வெளியேது நினைவேது கனவுமேது
அகவுறவு பற்றற்று துறவுறவு முற்றுமற ஆரியர்கள் பரவுதில்லை
அதிபதீ ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பிலுறை நடனபதியே. (5)

திருச்சிற்றம்பலம்.