உ
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
சிதம்பர நடராஜர்
பஞ்சாட்சர மகிமை.
_______
வசியசிவ சங்கரா வசியகங் காதரா வசியகை
லாசவாசா
வசியபணி யணியுரா வசியமான் மழுகரா வசியசிவ
காமிநேசா
வசியதிரு நேத்திரா வசியபுவ
நேசுவரா வசியஓம் நடனபாதா
வசியகரி யுரியழக வசியபுலி
யிடையழக வசியசிர மாலை யழகா
வசியமதி முடியழக வசியபசு பதியழக
வசியவென் மனதில்பாசா
வசியமுந் நூலழக வசியவெண் ணீறழக வசியமறை பரவுமழகா
வசியவென யுனையனு தினம்போற்று மடியார்க்கு அருள்மடை
திறந்ததில்லை
அதிபதீ ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பிலுறை
நடனபதியே. (1)
சிவயநம வென்றுதின மூழ்கியுரு வேற்றுவார்
செய்தொழி லெலாம் வசியமாம்
ஜெகவசிய மாம்சகல முகவசிய மாம்செய்ய சித்துகளெலாம்
வசியமாம்
வயநமசி யென்றுவுரு மாட்டுவார் சத்ராதி வானாட விட்டபந்தாம்
மடங்காத பூதபே தம்பிசா
சிவையெலாம் வளர்குலா லன்திகிரியாம்
யநமசிவ வயநமசி சிவயநம
வெல்லாமுன் னடன மன்றோ
இவ்வுலகம் பொருளுதவி அவ்வுலக
மருளுதவி யீயவிரு தெய்வமுளவோ
அவுணாதி புவனாதி கௌணாதி
முத்தர்க்கு அருள்மடை திறந்ததில்லை
அதிபதீ ஜனகாதி துதிபதி சிவகாமி
அன்பிலுறை நடனபதியே. (2)
புல்லாய்ப் பிறந்தாலு மிருகாதி
ஜனனங்கள் பசியாறி மகிழுமன்றோ
பூண்டாய்ப் பிறந்தாலும் புலத்தியர்கள்கொண்டுசில
பிணிதீர்த்துப் புகழ்வரன்றோ
|