பனியொத்த நக்ஷத்தி
ரங்களிரு பத்தேழும்
பக்குவப் படுத்திப்பின்னால்
பகர்கின்ற கரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பாரையும் அதட்டியென்முன்
கனிபோல வேபேசி கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களை யுங்கசக்தி
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள்தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவைமுனி சாமியெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. (11)
திருச்சிற்றம்பலம்.
|