சேயர்க ளிருந்தென்ன குருவாய்
இருந்தென்ன
சீஷர்க ளிருந்துமென்ன
சித்துபல கற்றென்ன நித்தம் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக்கண்டுதடுக்க
உதவுமோ இதுவெலாம் சந்தைஉற வென்றுதான்
உன்னிரு பதம்பிடித்தேன்
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்
கண்பார்வை யதுபோதுமே
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே. (9)
இன்னமுஞ் சொல்லவோ
உன்மனங் கல்லோ
இரும்போ பெரும்பாறையோ
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ
என்னன்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவோவுன் செய்கைதானோ
உன்னைவிட் டெங்குசென்
றாலும்விழ லாவனான்
உனையடுத் துங்கெடுவனோ
ஓகோவி துன்குற்ற மென்குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையா
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியரு ளளிக்கநினைவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே. (10)
சனிராகு கேதுபுதன் சுக்கிரன்
செவ்வாய்குருச்
சந்திரன் சூர்யனிவரை
சற்றெனக் குள்ளாக்கி
ராசிபனி ரண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே
|